கோயம்பேடு பஸ் நிலையம் உள்ள இடத்தில் இப்படியொரு திட்டமா? சட்டசபையில் சட்டென வந்த குரல்! என்ன நடக்குது
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் என்ன கட்டுமானம் கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.
இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.

ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
என்ன திட்டம்: கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று சட்டசபையில் இதை பற்றிய முக்கிய விவாதம் நடந்தது. அப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் சர்வதேச விளையாட்டு அரங்கமாக மாற்றப்பட வேண்டும் என்று விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகரராஜா கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அரசு தகவல்படி, இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே அமைக்கப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோயம்பேடுவில் உள்ள பரபரப்பான பேருந்து நிலையம் விரைவில் கலாச்சார, வணிக மற்றும் நிதி மையமாக மாற்றப்படும். மெட்ரோ இணைப்புடன், நிரந்தர திறந்தவெளி சந்தையை உருவாக்க உள்ளனர். மிகப்பெரிய ஃபுட் பிளாசா மற்றும் கிராஃப்ட் பஜார் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான கட்டிடங்களை உருவாக்க CMDA திட்டமிட்டுள்ளது.
16 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் பேருந்து நிலையம் பூங்காவாக மேம்படுத்தப்படும். பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் . அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம்: கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications