தங்கம் இருக்கா? மாதாமாதம் அரசிடம் இருந்து வட்டி வேண்டுமா? வருமான வரியே கிடையாத சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் வீட்டில் உள்ள தங்கத்தை வைத்து வருமானம் ஈட்டுவதுதான் Gold Monetization என்ற திட்டமாகும்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Gold Monetization Scheme என்றால் என்ன?

Do you know What is Gold Monetization?

உங்கள் வீட்டில் உள்ள தங்கத்தை வருமானம் ஈட்ட வைக்க இது ஒரு முறை. அதாவது, உங்கள் வீட்டிலுள்ள தங்கத்தை, அரசிடம் ஒப்படைத்து, அதற்கு ஈடான தொகைக்கு வருடா வருடம் வட்டி வருமானமும், தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் பயனையும் ஒரு சேர அனுபவிக்கலாம்.

இந்த பயன்களை எப்படி பெறுவது?

1. நீங்கள், உங்கள் வீட்டிலுள்ள தங்கத்தை, உங்களுக்கு அருகிலுள்ள Collection and Purity Testing Centres (CPTC) க்கு எடுத்துச் சென்று, அதன் மதிப்பினை அளவீடு செய்து அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தங்கம், உருக்கப்பட்டு, 995 purity க்கு எடுத்துக் கொள்ளப்படும்.

2. இந்த சான்றிதழை, குறிப்பிட்ட வங்கிகளுக்கு (ICICI Bank, Corporation Bank/Union Bank of India, Indian Overseas Bank, Punjab National Bank, State Bank of India, HDFC Bank, Yes Bank, Dena Bank/Bank of Baroda) எடுத்துச் சென்று, டெபாசிட் செய்ய வேண்டும். உங்களது பெயரில், ஒரு டெபாசிட் கணக்கு தொடங்கப்பட்டு, உங்களது தங்கம் (995 purity) கிராம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

3. நீங்கள், உங்கள் டெபாசிட் காலத்தினை தேர்வு செய்து ரசீதினை பெற்றுக் கொள்ள் வேண்டும்.
Short Term (1-3 years) Bank Deposit (STBD)
Medium (5-7 years) and
Long (12-15 years) Term Government Deposit Schemes (MLTGD)

4. உங்கள் டெபாசிட் காலத்திற்கு, வட்டியானது (அந்தந்த வங்கிகள் முடிவு செய்து கொள்ளலாம்) உங்களுக்கு maturity யின் பொது வழங்கப்படும். தற்போது அதிகபட்ச வட்டி 2.25% முதல் 2.50% வரை வழங்குகிறார்கள்.

5. டெபாசிட் முதிர்ச்சியின்போது, நீங்கள் பணமாகவோ அல்லது தங்கமாகவோ (உங்கள் நகை கிடைக்காது. தங்க coin அல்லது 99.9% தங்க பிஸ்கட் வாங்கிக் கொள்ளலாம்) வாங்கிக் கொள்ளலாம்.

வருமான வரி?

👍 இந்த டெபாசிட் மூலம் நீங்கள் ஈட்டும் வருமானத்திற்கு வருமான வரியோ சொத்து வரியோ கிடையாது.
👍 உங்கள் தங்கம் விலை அதிகரித்திருந்தால், அதற்கான capital gains ம் வரியிலிருந்து (LTCG/STCG) விலக்கு அளிக்கப்படுகிறது.

எவ்வளவு தங்கம் ஒரு இந்திய குடிமகன்/குடிமகள் வைத்திருக்கலாம்?

திருமணமான பெண்கள்: 500 கிராம்
திருமணமாகாத பெண்கள்: 250 கிராம்
ஆண்கள்: 100 கிராம்.

முக்கிய குறிப்பு: நீங்கள் டெபாசிட் செய்யும் உங்களது நகைகள் உருக்கப்பட்டு, 995 purity க்கு மாற்றப்படும். நீங்கள் வைத்த நகைகள், டெபாசிட் முதிர்ச்சியின்போது, அந்த நாளின் தங்க மதிப்பில், பணமாகவோ அல்லது தங்க coin/biscuit ஆகவோ தான் கிடைக்கும்.

மேலதிக தகவல்களுக்கு, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினை https://www.rbi.org.in/Scripts/BS_ViewMasDirections.aspx?id=10084 இந்த வெப்சைட்டில் படிக்கவும். இவ்வாறு ராஜேஷ் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+