காளியம்மாள் அந்த கட்சியில் இணைகிறாரா? இதுதான் அந்த மாஸ்டர் பிளானா? அமைப்பு தொடங்குவது எப்போது?
சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகியதை அடுத்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வேறு எந்த அரசியல் கட்சியில் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் முகமாக இருந்தவர் காளியம்மாள். மத்திய மாநில அரசுகளை தனது நாதக கூட்டங்களில் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அது போல் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த போதும் கூட தமிழ் தேசியம் சார்ந்த விஷயங்களை பேசினார். அது போல் சீமான் மீதான விமர்சனங்களுக்கும் கேலி கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சீமான், தனது மனைவி கயல்விழிக்கு தந்த போது அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என சீமானிடம் கேட்டதாக ஒரு கூட்டத்தில் சீமானே தெரிவித்தார்.
மேலும் காளியம்மாளை பிசிறு என கடுமையாக விமர்சித்திருந்தார். சீமானின் தம்பிகளும் காளியம்மாளை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனால் கட்சியில் ஒதுங்கியே இருந்த நிலையில் அவர் எப்போது நாதகவில் இருந்து விலகுகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த போது காளியம்மாளும் இணைய போவதாக ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் இதை அவர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சீமானிடம் கேட்ட போது காளியம்மாள் போனால் போகட்டும் என தெரிவித்தார். இதனால் இரு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்றைய தினம் ஒரு முக்கிய முடிவை காளியம்மாள் எடுத்துள்ளார்.
அதாவது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். "கடந்த 6 ஆண்டுகளாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.
எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன் என பல்வேறு காரணங்களை கூறி காளியம்மாள் விலகிவிட்டார்.
தற்போது அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் திமுக அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், காளியம்மாள் தற்போது தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு அமைப்பை தொடங்கி, அதில் தமிழ் மண், தமிழ்த் தேசியம் தொடர்பான சில ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவார் என தெரிகிறது.
மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் போது ஏதாவது ஒரு முதன்மை கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் காளியம்மாள் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எனவே இன்னும் ஓராண்டுக்கு காளியம்மாள் எந்த கட்சிக்கும் போகமாட்டார் என்றே தெரிகிறது.
காளியம்மாள் விலகலால் சீமானுக்கு ஏதேனும் நெருக்கடி இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா, எந்த மாதிரியான பிரச்சினைகள் எழும் என்பதை கமென்ட்டில் மறக்காமல் சொல்லுங்கள்.!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications