விற்பனை பத்திரம்.. அதைவிடுங்க.. "சிட்டா - பட்டா" இருக்கா? பட்டாவில் பெயர் மாற்ற முடியுமா..இதை படிங்க
சென்னை: வீடு - மனை உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்கள் ஏராளமாக உள்ளன.. அவற்றில் மிக முக்கியமானது, பட்டா, சிட்டா. நிலம் வீடு, வாங்குவதில் இந்த பட்டா, சிட்டாவின் பங்கு அளப்பரியது என்றாலும், இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒருவரது தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணம் பெயர்தான் பட்டா.. ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும்.

தீர்வை விவரங்கள்: அதாவது சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அதிகாரப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமாகவும் உரிமையை காட்டும் ஆவணமாகும்.. அரசு இந்த ஆவணத்தை வழங்கும்.. இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களையும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆவணங்கள்: அதாவது, ஒரு அசையா சொத்தின் ஓனர் யார் என்பதற்கு வருவாய்த்துறை வழங்கக்கூடிய ஆவணம்தான் இந்த பட்டா.. பட்டாவில் 2 வகை உண்டு..
ஒன்று கூட்டுப் பட்டா, இன்னொன்று தனிப் பட்டா.. ஒருவர் நிலம் வாங்கினால் அவருக்கு தரப்படுவது தனிப்பட்டா என்பார்கள்.. இதை வைத்து, நிலத்திற்கான சர்வே நம்பர், வாங்குபவர் பெயருக்கு மாற்றம் செய்யப்படும். ஆனால், ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓனர்கள் இருந்தால், அந்த நிலத்திற்கு கூட்டுப்பட்டாவாக வழங்கப்படும்.
சிட்டா என்பது ஒருவகை ஆவணம்.. ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? அந்த நிலத்துக்கு யார் ஓனர்? அந்த நிலம் நஞ்சையா? புஞ்சையா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்ற விவரங்களை அடங்கிய ஆவணமாகும்.. வருவாய்த்துறை மூலம் தரப்படும் பதிவு ஆவணத்தின் பெயர்தான் சிட்டா. கிராம நிர்வாக அலுவலர் இதை நிர்வகிப்பார்.. சுருக்கமாக சொல்லப்போனால், பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா.
அவசியம்: ஆக, மனையை விற்பவரும் சரி, வாங்குபவரும் சரி, இருவருக்குமே பட்டா சிட்டா மிகவும் தேவை.. நிலம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு இவைகள் மிகவும் அவசியம்.. முக்கியமாக, வீடு கட்டும்போது, இந்த ஆவணத்தை கட்டிடம் கட்டுபவர் வைத்திருக்க வேண்டும்..

கடந்த 2015-ம் ஆண்டு முதல், இந்த 2 ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. இப்படி இணைக்கப்பட்ட பிறகு இதன் பெயர் "பட்டா சிட்டா" என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல, சிட்டா பட்டா சான்றிதழ்களை, ஆன்லைன் மூலமாகவும் பார்த்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டா ஆவணத்தை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். வருவாய்த் துறையின் கீழ் இந்த சேவை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றம்: அதேபோல, பட்டா சிட்டா பெயர்களை மாற்றம் செய்யலாம்.. இதற்கு ஆன்லைனில் வழிவகை இல்லை.. அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பட்டா பரிமாற்ற படிவத்தை எடுக்க வேண்டும்.. பிறகு, படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் போதும். 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications
