Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் 2024 முழுக்க.. அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா? கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தை எது என்று கூகுள் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், 346 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர ஆன்லைன் தேடல்களுடன், கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தை "YouTube" ஆகும். கூடுதலாக, அதன் டிராபிக்கில் 99 சதவீதத்திற்கும் மேலாக கூகுளில் இருந்து வந்த டிராபிக் ஆகும். 228 மில்லியன் மாதாந்திர தேடல்களுடன் "facebook" இரண்டாவது மிகவும் பிரபலமான முக்கிய வார்த்தையாகும். மாதந்தோறும் சுமார் 163.94 மில்லியன் தேடல்களுடன் "Amazon" மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கூடுதலாக, "translate " என்ற முக்கிய சொல், மாதந்தோறும் சுமார் 141.5 மில்லியன் தேடல்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.

year ender 2024 2024

youtube 346.37 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
facebook 228.06 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
amazon 163.94 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
translate 141.51 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
instagram 116.91 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
ஜிமெயில் 107.77 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
whatsapp web 100.7 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
chatgpt 100.66 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல்செய்யப்பட்டு உள்ளது.
கூகுள் 99.66மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
twitter 80.56 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
google 67.05 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.
google maps 63.95 மில்லியன் கணக்கில் மாதாந்திர தேடல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா சர்ச்: கூகுளின் 2024 தேடலில் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் பற்றியே அதிகம் தேடப்பட்டு உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), டி20 உலகக் கோப்பை மற்றும் பிஜேபி ஆகியவை அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

மே 12 மற்றும் 18 ஆம் தேதிகளில் "இந்தியன் பிரீமியர் லீக்" க்கான கூகுள் தேடல்கள் மிக அதிக அளவில் பதிவாகி உள்ளன. 2024 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளின் பட்டியலில் "டி20 உலகக் கோப்பை" இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக "பாரதிய ஜனதா கட்சி" என்ற வார்த்தை இடம் பிடித்துள்ளது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தல் நடந்த காரணத்தால் பாஜக அதிக அளவில் தேடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு "தேர்தல் முடிவுகள் 2024" என்பது Google தேடலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

அதேபோல் கூகுளில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி இந்த வருடம் "என்ன பார்க்க வேண்டும்?" என்பதுதான். அதாவது What to Watch . பலரும் ஓடிடி பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்ன சீரிஸ் பார்ப்பது என்ற குழப்பம் இருக்கும். அதிலும் பலர் சாப்பிட்டுக்கொண்டே ஏதாவது பார்க்கலாம் என்று ஓடிடி எடுத்துவிட்டு கடைசியில் சாப்பிட்டு முடிக்கும் வரை என்ன பார்ப்பது என்று தெரியாமல் குழம்புவது உண்டு.

அப்படிப்பட்டவர்கள்தான் What to Watch என்று தேடி இருக்கிறார்கள். இதை கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் 7.5 மில்லியன் பேர் இப்படி தேடி இருக்கிறார்களாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+