தமிழக அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு எந்த இடம் தெரியுமா? அப்போ செந்தில் பாலாஜிக்கு?
சென்னை: தமிழக அமைச்சரவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு எந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். அத்துடன் புதிதாக நேற்று முன் தினம் பதவியேற்ற 4 அமைச்சர்களுக்கும் எந்தெந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 4 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் நேற்று முன் தினமே தலைமைச் செயலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலை அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உட்காருவார். அவருக்கு அடுத்து துரைமுருகன், அவருக்கு அடுத்து உதயநிதி, பிறகு நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம் பெறுள்ளனர். அது போல் புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போல் செந்தில் பாலாஜிக்கு 21 ஆவது இடமும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியனுக்கு 27ஆவது இடமும், சா.மு. நாசருக்கு 29ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வரான போது முதலிடத்தில் மறைந்த கருணாநிதியும், 2ஆவது இடத்தில் க.அன்பழகனும் மூன்றாவது இடத்தில் மு.க.ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications