Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+2 படிப்பு.. அனுபவமே இல்லாத ஊழியர்களுக்கு கூட ரூ.26-38 ஆயிரம் வருமானம்.. சாம்சங் சம்பளம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாம்சங் நிறுவனத்தில் +2 முடித்த ஊழியர்களுக்கு கூட 0-3 வருடம் அனுபவம் இருந்தால் கூட நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. சாம்சங் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்று இங்கே பார்க்கலாம்.

சாம்சங் போராட்டம் உச்சம் அடைந்து உள்ளது. சாம்சங் ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுவிட்டன. அவர்களிடம் ஏற்கனவே யூனியன் உள்ளது. ஆனால் citu யூனியன் இல்லை. இந்த யூனியன் அமைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று சாம்சங் ஊழியர்கள் கூறி வருகின்றனர்.

samsung tamilnadu govt

citu யூனியன் அமைக்க சாம்சங் விரும்பவில்லை. இதற்கு எதிராக உயர் நீதிமன்ற வழக்கு நடக்கும் நிலையில் அதில் முடிவு எடுக்க முடியாது. மற்ற 15 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன.

அதாவது சாம்சங் மற்றும் பெரிய நிறுவனங்களின் கருத்து வேறுபாட்டின் முக்கிய அம்சம் தெளிவாக உள்ளது:

1. சம்பள உயர்வு - ஏற்றுக்கொண்டனர் .
2. பாதுகாப்பு உபகரணங்கள் - ஏற்றுக்கொண்டனர் .
3. இடைவேளை வழங்குவது - ஏற்றுக்கொண்டனர் .
4. 8 மணி நேர ஷிப்ட் - ஏற்றுக்கொண்டனர்
5. சம்பள உயர்வு செயல்முறைகள் - ஏற்றுக்கொண்டனர்
6. சரியான பணி மேற்பார்வை - ஏற்றுக்கொண்டனர்
7. குழந்தைகளுக்கான பள்ளி வசதி - ஏற்றுக்கொண்டனர்
8. மருத்துவ காப்பீடு - ஏற்றுக்கொண்டனர்
9. சமுதாய கூடம் - ஏற்றுக்கொண்டனர்
10. இலவச தேநீர் மற்றும் சிற்றுண்டி - ஏற்றுக்கொண்டனர்
11. மானிய உணவு - ஏற்றுக்கொண்டனர்
12. தீபாவளி/பொங்கல் போனஸ் - ஏற்றுக்கொண்டனர்
13. மே போனஸ் - ஏற்றுக்கொண்டனர்
14. தொழிற்சங்கம் தேவையா - ஏற்றுக்கொண்டனர்
15. நிர்வாகத்துடன் வழக்கமான சந்திப்புகள் - ஏற்றுக்கொண்டனர்
16. தொழிற்சாலைக்கு வெளியே உள்ள நபர் தலைமையிலான UNION - அதாவது CITU யூனியன் அமைப்பது **ஒப்புக்கொள்ளவில்லை.**

சம்பளம் எவ்வளவு: சென்னை சாம்சங் நிறுவனத்தில் +2 முடித்த ஊழியர்களுக்கு கூட 0-3 வருடம் அனுபவம் இருந்தால் கூட நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. சாம்சங் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்று இங்கே பார்க்கலாம்.

இங்கே அனுபவமே இல்லாத +2 முடித்த ஊழியர்களுக்கு ஆபரேட்டர் 1 என்றால் அவர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கொடுக்கப்படும். அதுவே டெக்னீசியன் எல்3க்கு 38 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

+2 முடித்த ஊழியர்களுக்கு 18 வருடம் வரை அனுபவம் என்றால் டெக்னீசியன் எல்3க்கு 66 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

இங்கே சராசரியாக 28 ஆயிரம் ரூபாய் வரை 66 ஆயிரம் வரி ஆபரேட்டர் 1 முதல் டெக்னீசியன் எல்3 வரை பலருக்கும் வழங்கப்படுகிறது.

அரசு விளக்கம்: சாம்சங் போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசு முடிவெடுக்க முடியவில்லை. உத்தரவு எப்படி வந்தாலும் அரசு அதனை செயல்படுத்தும். பல கோரிக்கைகளை ஏற்க நிறுவனம் முன்வந்துள்ளதால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும், என்று தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+