சரத்குமாரின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இளையராஜாவை நம்பி ஹீரோ ஆகாதவர்!
சென்னை: நடிகர் சரத்குமாரின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர் இளையராஜாவுக்கு பதிலாக எந்த இசை கலைஞர்களை பயன்படுத்தினார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சரத்குமாரோட ஸ்பெஷல் என்னன்னா அவர் இளையராஜாவை நம்பி ஹீரோவாக வலம் வராதவர். ராசா ராசா தான்னு டைட்டில் வைக்காதவர்.

அதனால் தான் அவர் சொந்தப்படம் மூன்றாவது முறை எடுத்த போது ரகசிய போலீஸ் படத்துக்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் ஜோடியை தேடிப் போனார்னு நினைக்கிறேன். பொதுவா லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் ஜோடி இசையமைப்புல குறிப்பா தமிழில் டூயட்னா அந்த பாடலின் இசை ஒரு travelling ஆக இருக்கும்.
கண்ணை மூடி காரோ, பைக்கோ கொடுத்து நாயகன்-நாயகியை போகச் சொல்லி ஷாட் எடுத்து பாட்டை இணைச்சிடலாம். அதோடு இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா எல்லா பாட்டுமே சின்ன எக்கோவோடு இருக்கும். ஹில்ஸ் பேக்ரவுண்ட்ல நாயகன் "மயில் தோகை அழைத்தால் மனம் உன்னை விரும்பும்"னு பர்ஃபெக்டா மலைகளில் எதிரொலிக்கிற மாதிரி செட்டாகும்.
முதலில் தமிழுக்கு அழைத்து வந்தது தயாரிப்பாளர் கோவைத்தம்பின்னு நினைக்கிறேன். இதயக்கோவில் படத்துக்கு ரீரெக்கார்டிங் தேதி புக் செய்து கொண்டு போன போது ராஜா அதே புக் செய்த தேதியில் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை'க்கு முதல் மரியாதை கொடுத்தது கோவைத்தம்பியை காயப்படுத்திடுச்சு. உடனே அடுத்த படம் 'உயிரே உனக்காக'வுக்கு கோவைத்தம்பி மும்பைக்கு போய் இவங்களை புக் பண்ணினார். அந்தப் பட பாடல்களும் ஹிட்டாகி யார் இந்த லக்ஷ்மிகாந்த்-பியாரிலால்னு கேட்கக்கூடியதாக தான் இருந்தது.
1937 ஒரு தீபாவளியில் லக்ஷ்மி பூஜையில் பிறந்ததால லக்ஷ்மிகாந்த்னு பெயர் பெற்றவர் லக்ஷ்மிகாந்த் சாந்தாராம் பாட்டில் குதால்கர். சின்னக்குழந்தையா இருந்தப்பவே அப்பா இறக்க வறுமையில் மாட்டிக் கொண்டார். அப்பாவின் நண்பர் மியூஸிஷியனாக இருந்ததால ஏதாவது வாசிக்கக் கற்றுக் கொள்ள சொன்னார். அப்படி மாண்டலின் வாசிக்க கற்றுக் கொண்டார்.
பியாரிலால் ராம்பிரசாத்ஷர்மா அப்படிங்கிற ட்ரம்பட் பிளேயருக்கு மகனாக 1940ல் பிறந்தவர். அப்பாவின் தூண்டுதலால் வயலின் கற்றுக் கொண்டார். கோவாவைச் சேர்ந்த ஆண்டனி கோன்ஸல்விஸ் என்பவரிடம் வயலினை முழுக்கக் கற்றுக் கொண்டார். அவர் நினைவாகத்தான் அமர் அக்பர் ஆண்டனியில் ஆண்டனிக்கு கோன்ஸல்விஸ் என்கிற அடைமொழி வந்தது.
அவருக்கு 12 வயதாகும் போது குடும்பம் நொடித்துப் போக பணம் உண்டாக்கும் வேலை பியாரிலாலுக்கு வர அவர் வயலினோடு ஸ்டுடியோ ஸ்டுடியோவுக்காக நடந்தார். தன்னோட இசை நிகழ்ச்சி இடையில் மாண்டலின் வாசித்த லக்ஷ்மிகாந்த்தின் மீது ப்ரியப்பட்டு பேசிய லதா மங்கேஷ்கர் அவர் கதையை கேட்டு தன் ஸுரில் கலாகேந்திரா என்கிற இசைப்பயிற்சிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார்.
அங்கு தன்னைப் போலவே குடும்பக்கஷ்டமுள்ள பியாரிலாலை சந்தித்தார். வறுமை இருவரையும் உற்ற நண்பர்களாக்குகிறது. லதாவின் சிபாரிசில் நௌஷாத், s.d.பர்மன் போன்றோரிடம் வாய்ப்புக் கிடைத்தது. இருவரின் வாழ்க்கையும் ஒன்றாகத் தொடங்கியது.
1963ல் அவர்கள் தனி இசையமைப்பாளர்களாக இசையமைத்தப் படம் வெளிவரவேயில்லை. பரஸ்மணி என்கிற படம் வெளிவந்து பாடல்கள் ஹிட்டாகிறது. மிகவும் பாப்புலரானது இரு புதுமுகங்கள் நாயகர்களாக நடித்த 'தோஸ்தி' படம் வெற்றி பெற்றதால் தான். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கைப்பயணம் நிற்காமல் வெற்றியோடு போனது.
கேரளாவில் செம பாட்டு ஒண்ணு...மோகன்லால் பாட்டுன்னே எல்லோரும் நினைக்கும் பாட்டு. "ஆட்டுத் தொட்டிலில் நின்னே கிடத்தி உறக்கும் ஞான்..." பூ நிலாமழ என்கிற படத்தில் வரும் இந்தப்பாட்டை போடாத FM ரேடியோ கிடையாது. மாதத்தில் நான்கு முறையாவது போட்டுவிடுவார்கள். செம பாட்டு. இதை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தான்.
வைசாலி மலையாளப் பட ஹீரோ சஞ்சய்மித்ரா அல்ட்ரா மாடர்ன் ஹீரோவா நடிச்ச படம் 'பூ நிலா மழ'. பாட்டுல்லாம் ஹிட்டாச்சு. உயிரே உனக்காக படத்தில் கூட 'கவிதைகள் விரியும் விழியிலே...' பாட்டு கூட ஒரு ட்ராவலிங் பாட்டு தான். மோகன், நதியா பைக்ல போக, வில்லன் ஆட்கள் பைக்கில் வர, ஹெலிகாப்டர் பறக்க அழகான பாட்டு. ஆனால் அடுத்த படமான மங்கை ஒரு கங்கை சோபிக்கவில்லை.
மனசை கொள்ளை கொண்டது சரத்குமாரோட 'மயில் தோகை அழைத்தால்' பாட்டு தான். நக்மாவோட என்ட்ரி செமயா இருக்கும். சரத் கூட கொஞ்சம் அழகா தெரிவார். சுவிட்சர்லாந்த்துக்காகவே லக்ஷ்மி ஜோடி பாட்டு போடுவாங்க போல... லக்ஷ்மி காந்த் இப்போ நம்மோடு இல்லை... பியாரிலால் இருக்கிறார். கடந்த Sep3 அவர் பிறந்த நாள்.
எத்தனையோ ஹிந்தி ஹிட்களை கொடுத்தவர்கள் இந்த ஜோடி... மயில் தோகை தான் மனதை கொள்ளைஅடித்து விட்டது.... "வளைக்காமல் வளைக்கரம் தேட, வருந்தாமல் துணைக்கரம் கூட, இடைசேர நமக்கு, இடைவேளை எதற்கு....?" என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications