நல்ல சான்ஸ்.. இப்பவே போய் தங்கம் வாங்கிடுங்க.. தங்கம் விலையை நோட் பண்ணுங்க! ரொம்ப முக்கியம்
சென்னை: சென்னையில் இன்று தங்கத்தின் விலை மாற்றமின்றி உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,680 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹ 7,287 ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது).
இன்று தங்கம் விலை: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.10% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 3.50% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.844.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.73,303 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,341 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,900 ஆக இருந்தது.

சென்னையில் தங்கம் விலை - செப்.8 நிலவரப்படி:
சென்னையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.72,010 ஆக உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.69,001 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 10 கிராம் ரூ.70,600 ஆகவும் இருந்தது.
மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,680 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,320 ஆகவும் உள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,737 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,473 ஆகவும் உள்ளது.
திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,483 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,184 ஆகவும் உள்ளது.
தங்கம் உச்சம் தொடும்: 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும்.. அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2030ல் விலை உச்சம் அடையும்: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.
சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இதன் மூலம் 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் 86 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை எட்டலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications