Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிகப்படியான அரசு ஊழியர்கள் பணியாற்றும் துறை என்றால் அது குரூப் 4 பணியிடங்கள் தான். அதேபோல் விஏஓ என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் தான் பல சாமானிய மக்களை அரசு ஊழியராக மாற்றி உள்ளது. கடந்த 2016ம் ஆணடு விஏஓவாக பணியில் சேர்ந்தவரின் சம்பளம் எவ்வளவு 2026ல் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

2016-இல் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்த ஒருவர், 10 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு 2026-இல் பெறக்கூடிய தோராயமான சம்பளம் பற்றி முழுமையாக பார்ப்போம். 2026-இல் பணியில் சேர்ந்த ஒரு விஏஓ, தற்போது 10 ஆண்டுகால சேவையை நிறைவு செய்திருப்பார். தமிழ்நாட்டில் VAO பதவிக்கு ஊதிய விகிதம் 8 (ரூ.19,500 - ரூ.71,900) என்று வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் அவர் சுமார் 10 வருடாந்திர ஊதிய உயர்வுகளை (ஒவ்வொன்றும் 3%) பெற்றிருப்பார்.

Do you know what salary a person who joined as a VAO in Tamil Nadu in 2016 will be earning in 2026

அடிப்படை ஊதியம் எவ்வளவு

இதன்படி 2026-இல் அவரது அடிப்படை ஊதியம் 26,000 - ரூ.28,000 ஆக இருக்கும் அகவிலைப்படி ( 50%+)ரூ.13,000 - ரூ.14,000 வீட்டு வாடகைப்படி ரூ.1,500 - ரூ.3,500 (இடத்தைப் பொறுத்து மாறுபடும்) பிற படிகள் ரூ.1,000 - ரூ.1,500 ஆக மொத்த சம்பளம் (Gross)ரூ.41,000 - ரூ.47,000 ஆக இருக்கும். கையில் கிடைக்கும் சம்பளம் என்று பார்த்தால் பிடித்தங்கள் (போக சுமார் ரூ.36,000 முதல் ரூ.42,000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது).

கிராம நிர்வாக அலுவலர் சம்பளம்

அதேநேரம் 2016-இல் பணியில் சேர்ந்த ஒரு கிராம நிர்வாக அலுவலர் 2026-இல் 10 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும்போது அவருக்கு 'தேர்வு நிலை' தகுதி கிடைக்கும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி, 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணிபுரிந்தவர்களுக்கு அடுத்த உயர் பதவிக்கான ஊதிய விகிதத்தில் ஒரு ஊதிய உயர்வு அல்லது அதற்கு இணையான பலன்கள் வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு

இதன்படி, தேர்வு நிலை பெற்ற ஒரு விஏவின் சம்பளம் அப்படியே மாறிவிடும். அதன்படி அவரது அடிப்படை ஊதியம் சாதாரண நிலையில் இருப்பவரை விட சுமார் 3% முதல் 6% வரை கூடுதலாக இருக்கும். அடிப்படை ஊதியம் ரூ.28,500 - ரூ.30,500, அகவிலைப்படி ரூ.14,250 - ரூ.15,250, வீட்டு வாடகைப்படி ரூ.2,500 - ரூ.3,800, மருத்துவப் படி ரூ.300, நகர ஈட்டுப்படி & பிற படிகள்ரூ.1,000 - ரூ.1,500 மொத்த சம்பளம் ரூ.46,500 - ரூ.51,350 ஆக இருக்கும. கைக்கு கிடைக்கும் சம்பளம் ரூ.41,000 முதல் ரூ.45,000 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

பதவி உயர்வு வாய்ப்பு

10 ஆண்டுகள் விஏஓ-வாகப் பணிபுரிந்தவர், துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், அடுத்து வருவாய் ஆய்வாளர் (பதவி உயர்வுக்குத் தகுதியானவர் ஆவார். ஆர்ஐ பதவி உயர்வு கிடைத்தால்: அவரது ஊதிய விகிதம் லெவல் 10 (ரூ.20,600 - ரூ.75,900) அல்லது அதற்கும் மேலாக உயரும். அப்போது அவரது மொத்த சம்பளம் ரூ.55,000-ஐத் தாண்டக்கூடும்.


விஏஓவின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் என்ன

கிராம நிர்வாக அலுவலர் என்பவர் ஒரு கிராமத்தின் மிக முக்கியமான அரசு ஊழியர் ஆவார். வில்லேஜ் கலெக்டர் என்று சொல்லாம். அந்த கிராமத்தின் உச்சபட்ச அதிகாரம் உடையவர்.... கிராம அளவில் இவருக்கு அதிக அளவிலான அதிகாரங்கள் உள்ளன இருக்கிறது. வருவாய் மற்றும் நில ஆவணங்கள், கிராமத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் நிலப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். பட்டா மாற்றம் மற்றும் நில அளவீடு தொடர்பான பணிகளில் இவர் முக்கிய பங்கு வகிப்பார்.

சாதிச் சான்றிதழ்

கிராம அளவில் நில வரி மற்றும் பிற அரசு வரிகளை வசூலிக்க வேண்டிது விஏஓவின் கடமையாகும். துமக்களுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஜாமீன் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற கிராம அளவில் முதற்கட்ட விசாரணை நடத்திப் பரிந்துரை செய்வது விஏஓவின் முக்கியமான வேலை.

அரசு நிலங்கள்

அதேபோல் கிராமத்தில் நடக்கும் பிறப்பு, இறப்புப் பதிவுகளைக் கவனிக்க வேண்டும். கிராமத்தில் அசாதாரண சூழல் அல்லது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் (வட்டாட்சியர்/காவல்துறை) தகவல் அளிக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

இலவச வீட்டுமனைப் பட்டா

அதேபோல் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற அரசு நலத்திட்டங்களுக்குப் பயனாளிகளை அடையாளம் காண வேண்டும். புயல், மழை, வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது ஏற்படும் சேதங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது மற்றும் வாக்குச் சாவடிப் பணிகளில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+