'எனக்கு கோயில் கட்டினார்கள்’.. சனாதன தர்மம் எது தெரியுமா? திமுகவை தாக்கி குஷ்பு ட்வீட்
சென்னை: சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு நேற்று முதலே தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும், சனாதன தர்மத்தை ஏதிர்க்கக் கூடாது; ஒழித்தாக வேண்டும் என்றும் பேசினார். ஆனால் நாடு முழுவதும் பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக திரித்து பொய் செய்தி பரப்பினர்.

இதனடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அமைச்சர் உதயநிதியோ, தாம் சனாதன தர்மத்தைதான் எதிர்க்கிறேன்; காங்கிரஸ் ஒழிக என பிரதமர் மோடி பேசுகிறார்.. அப்படியானால் காங்கிரஸ் கட்சியினரை படுகொலை செய்ய மோடி சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை என திட்டவட்டமாக கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனதான தர்மம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்த போதும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக போராட்டம், போலீசில் புகார் என வட இந்திய பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நேற்று முதலே தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- முஸ்லீம் பின்னணியில் இருந்து நான் வந்தேன், இருந்தாலும் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம், நம்புவது, மரியாதை கொடுப்பது, அன்பு காட்டுவது அனைவரும் சமம் என ஏற்றுக்கொள்வது.
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்றுக்கொள்கிறார். திமுக ஏன் மறுக்கிறது? தங்களின் தோல்விகளை திசை திருப்பும் ஒரு வழி. சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அது அனைவரையும் உள்ளடக்கியது. திமுக உருவாக்க முயற்சிப்பது போல பிளவுபடுத்துவது அல்ல" என்று பதிவிட்டுள்ளார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications