நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்.. வாடகைத் தாய் சர்ச்சைக்கு இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் சூசக விளக்கம்
சென்னை: திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்த நிலையில் தொடரும் சர்ச்சைகளுக்கு அவர் இன்ஸ்டாகிராமில் சூசகமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் நயன்தாரா. இவர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலரை தவிர ரஜினி, விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
அவரது வாழ்க்கையில் சக நடிகர்களால் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கூட முடங்கி போகாமல் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றார். இதனாலேயே பெரும்பாலான பெண்களுக்கு நயன்தாராவை மிகவும் பிடிக்கும்.

ஹீரோ
ஹீரோவே இல்லாமல் ஹீரோயினாக மிரட்டும் நிறைய படங்களை அவர் செய்துள்ளார். இந்த நிலையில் தான் காதலித்து வந்த விக்னேஷ் சிவனுடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது. மகாபலிபுரம் ரிசார்ட்டில் கடற்கரையில் ஒரு கண்ணாடி மாளிகையை அமைத்து அதில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம்
இவர்களது திருமணத்திற்கு முன்னணி நடிகர்களாக இருந்தாலும் செல்போன் கொண்டு வரக் கூடாது என்ற விதிகள் விதிக்கப்பட்டன. அது போல் அவர்களுக்கான டிரஸ் கோடையும் இந்த ஜோடி அறிவித்திருந்தது. அந்த திருமணமும் பத்து பைசா செலவில்லாமல் காம்ப்ளிமென்டரியாகவே நடைபெற்றது. அது போல் இவர்கள் ஹனிமூனுக்கும் இலவசமாகவே சென்றனர்.

விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டா போஸ்ட்டில் அறிவித்திருந்தார். இந்த தம்பதிக்கு வாழ்த்துகளை சொல்வோர் சொல்லிக் கொண்டிருக்க, ஆனால் 4 மாதங்களில் எப்படி குழந்தை என்ற கேள்வியை பலர் முன்னெடுத்து வருகிறார்கள். திருமணத்தின் போது நயன்தாரா 6 மாத கர்ப்பிணியாகவும் இல்லை.

வாடகைத் தாய்
எனவே வாடகைத் தாய் மூலம் அவர் குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது. திருமணத்திற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் முறையை கையில் எடுத்து விதிகளை மீறியதாக சொல்லப்படுகிறது. மறுபக்கம் மிகப் பெரிய நடிகை, தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்காமல் திருமணமான 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை உருவாக்கிவிட்டார்கள் என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் இத்தனை சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டை போட்டுள்ளார். அவர் அந்த பதிவில் கூறிிருப்பதாவது: உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களிடம் கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். யார் உங்களிடம் சிறப்பாக இருக்க விரும்புகிறார்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர்கள் என தெரிவித்துள்ளார்.

உண்மை
அதுதான் உண்மை என்றும் கேப்ஷன் போட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் எல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும். அதுவரை பொறுமையாய் நன்றியுடன் இருங்கள் என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவுகளை பார்க்கும் போது வாடகைத் தாய் சர்ச்சைகளுக்கு இவர் அளித்த விளக்கமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
