முதல்வர் டேபிளில் 3 files! விஜய் எப்போது ஓபன் செய்ய போகிறார் தெரியுமா? புதுசுன்னாலும் செம தந்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் மேஜையில் இருக்கும் ஊழல் ஃபைல்கள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து விஜய் திட்டமிட்டு வைத்திருக்கிறாராம். தவெக ஆட்சியை 5 ஆண்டுகள் காப்பாற்றிக் கொள்ள விஜய் காய் நகர்த்தி வருகிறாராம்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 3 துறைகளில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த அறிக்கைகள் முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார்.

cm vijay

இந்த நிலையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சியினர் ஆதாரம் கேட்டனர். அதற்கு கடந்த 19ஆம் தேதி சட்டசபையில் விஜய் பேசுகையில், நான் இதை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆதாரம், ஆதாரம் என கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன் இங்கு நிதியமைச்சர் பேசிய போது 3 துறை தொடர்பான விவரங்கள் எனது மேஜையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அவர் போகிற போக்கில் அதை சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதை ஓபன் செய்துவிட வைத்துவிடாதீர்கள். மக்களிடம் எப்போது, எங்கே, என்ன பேச வேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டுதான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். நான் பேசுவேன், பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை, இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் அமைதியாக இருக்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்திருந்தார்.

இதிலிருந்தே தவெக, இடைத்தேர்தலை குறி வைத்திருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகியவை ஆகும்.

இந்த தொகுதிகளில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது.

இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை ஹைகோர்ட் விதித்த தடை நாளையுடன் முடிவடைய போகிறது. எனவே விரைவில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பது தவெகவுக்கு அவசியமாக உள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

118 இடங்களில் 107 இடங்களில் மட்டுமே தவெக வென்றது, இதனால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது.

இதில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியை தவிர மற்ற கட்சியினர் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவ்வபோது கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் விஜய் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துவருவதால் எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிகிறது.

எனவே 7 தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக வென்றால் சட்டசபையில் தவெகவுக்கு 114 இடங்கள் அதிகரிக்கும். மீதி 4 இடங்களுக்கு காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவே போதும். இதை வைத்து 5 ஆண்டுகளை எப்படியாவது கடந்து விடலாம்.

இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் இதில் வெல்ல வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அந்த ஊழல் ஃபைல்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு திமுகவின் இமேஜ் சரியும், தவெகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என விஜய் கணக்கு போட்டிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+