அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரூட்.. கோடம்பாக்கம் - பூந்தமல்லி போகணுமா? மொத்தமாக மாறப்போகும் பயண முறை!
சென்னை: சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மத்திய அரசின் உதவி இல்லாமலே சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை, 2025ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ சேவை: இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications