சென்னையில் இன்று மின் தடை .. பல்லாவரம் முதல் எண்ணூர் வரை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?
சென்னை: ஜூன் 10ம் தேதியான இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை, தாம்பரம் பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், எண்ணூர், பெரும்பாக்கம், எழில் நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் மின் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களிலும் நடைபெறும். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தினசரி நடைபெறும் பராமரிப்பு பணிகள் குறித்தும், அதனால் எங்கெல்லாம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். மேலும் இந்த மின்வழித்தட பராமரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் மின்வாரியம், மின்தடை குறித்து பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும். ஆன்லைனிலும் தெரிவிக்கும்.
அந்த வகையில் ஜூன் 10ம் தேதியான இன்று சென்னை, தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் மின் தடை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், எண்ணூர், பெரும்பாக்கம், எழில் நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம்: இந்திராகாந்தி ரோடு, மாரியம்மன்கோவில் தெரு, பஜார் ரோடு, மலைமேடு.
தண்டையார்பேட்டை: ஜி.ஏ.ரோடு மெயின் தெரு, ஐட்ரீம்ஸ் 3வது லேன்.
எண்ணூர்: கத்திவாக்கம், எண்ணூர் பஜார்,காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்,சிவன்படை, சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், வஉசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டு குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், இடிபிஎஸ் குடியிருப்பு, ஜோதிநகர், ராமநாரபுரம், சக்தி கணபதி நகர், சண்முக புரம்
பெரும்பாக்கம்: வேளச்சேரி மெயின் ரோடு, மாம்பாக்கம் மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், ரைஸ் மில் ரோடு தெரு, பெருமாள் கோவில் ஆர்ச், மேடவாக்கம், காந்தி நகர் சொசைட்டி, நூக்கம் பாளையம் ரோடு, ரோஸ் கார்டன் சாலை, பிளாசா 1 முதல் 2.
எழில் நகர்: கற்பக விநாயகர் 1-வது மெயின் ரோடு, கற்பக விநாயகர் 6-வது தெருமுதல் 35- வது தெரு,கூந்தர்யாகார்டன் மெயின் ரோடு.
ஐ.ஐ.டி: பொன்னியம்மன் கோவில் தெரு, புதிய தெரு, கணபதி அவென்யூ, கந்தன் கார்டன், கோர்டூர், துலுக்காத்தம்மன் கோவில் தெரு, ஏரிக்கரைசால் 1-வது மெயின் ரோடு, மண்ணப்ப தெரு, யாதவ தெரு, கோர்டூர் கார்டன் 1-வது முதல் 4-வது மெயின் ரோடு, என்.டி.டி.ஐ. குவார்ட்டர்ஸ், அறிஞர் அண்ணா தெரு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 4-வது தெரு வரை.
கொட்டிவாக்கம்: புதிய பீச் ரோடு, புதிய பீச் ரோடு நீட்டிப்பு மற்றும் சிட்ரஸ் ஒட்டல், ஆர்.டி.ஓ. அலுவலகம், திருவள்ளுவர் நகர் ஐ.ஒ.பி.ரோடு, 1-வது மெயின் ரோடு முதல் 7-வது மெயின் ரோடு வரை, 34-வது குறுக்கு தெரு முதல் 54-வது குறுக்கு தெரு வரை, பகத்சிங் சாலை 1-வது தெரு முதல் 6-வது தெரு வரை, சிவானி குடியிருப்புகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications