தமிழ்நாட்டில் பெண் வேட்பாளர்களே போட்டியிடாத 6 தொகுதிகள்.. எவையெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 39 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 லோக்சபா தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவை எந்தெந்த தொகுதிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Do you know which are the 6 constituencies in Tamil Nadu where women candidates are not contesting

வேட்பு மனு மீதான பரிசீலனை முடிந்து தற்போது 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது. இதன்படி 950 வேட்பாளர்கள் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 பேர் வாபஸ் பெற்ற காரணத்தால், இறுதியாக 950 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண்கள் மட்டும் 874 பேர் போட்டியிடுகின்றனர். 76 பெண்கள் போட்டியிடுகின்றனர். மாற்று பாலினத்தவர் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், 6 லோக்சபா தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. மத்திய சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி ஆகிய 6 லோக்சபா தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை. இதே போல் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடும் நிலையில் மாற்று பாலினத்தவரும் ஒருவர் கூட போட்டியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் அதிகபட்சமாக கரூர் லோக்சபா தொகுதியில் மட்டும் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதேபோல் தமிழகத்தில் மிக குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் லோக்சபா தொகுதி எதுவென்று பார்த்தால், நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி தான். இங்கு வெறும் 9 வேட்பாளர்களே போட்டியிடுகிறார்கள்.

முன்னதாக தமிழ்நாடு முழுக்க உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 1085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கரூரில் 62 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் முடிந்தததையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+