தமிழகத்தில் பாஜக எந்தெந்த லோக்சபா தேர்தல்களில் வென்றுள்ளது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி நாங்கள் தான் என்று கூறி வரும் பாஜக, கடந்த காலங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களில் எந்தெந்த தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

வட மாநிலங்களில் அசாத்திய வெற்றியை குவிக்கும் பாஜகவுக்கு தென் மாநிலங்கள் சிம்ம சொப்பனமாகவே உள்ளன. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது இல்லை. அதிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடம் கூட இதுவரை வெற்றி பெற்றது இல்லை.

Tamil Nadu BJP Lok Sabha Election 2024 2024

தமிழகத்திலும் பாஜக காலூன்ற பகீரதபிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், பாஜக எதிர்பார்த்த அளவிற்கு தமிழகத்தில் அந்தக் கட்சியால் கணிசமான இடங்களை வெல்ல முடியவில்லை. அதேவேளையில், கேரளாவை போல இல்லாமல் தமிழகத்தில் சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த தேர்தல்களில் எல்லாம் கடந்த கால தேர்தல்களில் பாஜக வென்றுள்ளது என்பது பற்றி இங்கே பார்ப்போம். கடந்த 1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 3 இடத்தில் வென்றது. நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாஸ்டர் மதன் வெற்றி பெற்றார். கோவையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம் வென்றார்.

ஓராண்டில் அப்போதைய வாஜ்பாய் அரசு கலைந்ததால் மீண்டும் 1999-ல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 4 இடங்களில் வென்றது. நீலகிரியில் மாஸ்டர் மதன், நாகர்கோவிலில் பொன் ராதாகிருஷ்ணன், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலம், கோவையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றனர்.

2004 மற்றும் 2009 லோக்சபா தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு 2014 தேர்தலில் பாஜக வெற்றியை ருசித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக ஒரு தொகுதியிலும் வென்றது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எங்குமே வெற்றி பெறவில்லை. அப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. தற்போதைய தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்த தேர்தலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. அதேபோல அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதி, தமிழிசை போட்டியிடும் தென் சென்னை, ஏசி சண்முகம் போட்டியிடும் வேலூர், பாரிவேந்தர் போட்டியிடும் பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

அதேபோல தர்மபுரி தொகுதியில் கூட்டணிக் கட்சியான சவுமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடனும் பாஜக உள்ளது. அது மட்டும் இன்றி தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரும் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாஜக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+