அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை.. நீட் அரக்கனுக்கு பலியானவர்களின் விவரம்.. இத்தனை பேரா?
சென்னை: நீட் தேர்வில் இதுவரை பலியான மாணவர்கள் யார் யார் தெரியுமா? நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை பாராட்ட எண்ணித்துணிக எனும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில் ஒரு மாணவியின் தந்தை நீட் தேர்விலிருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என கேட்டார்.
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நீட் விலக்கு கொடுப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியது. இந்த போராட்டத்தில் நீட் தேர்வில் உயிர் நீத்த மாணவர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மொத்தம் 23 பேர் இந்த நீட் தேர்வால் பலியாகிவிட்டனர்.
இதுவரை நீட் தேர்வு தோல்வியாலும் அச்சத்தினாலும் உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள்:
- 2017 இல் அரியலூரை சேர்ந்த அனிதா
- 2018 இல் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா
- 2018 இல் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ
- 2018 இல் சென்னையை சேர்ந்த ஏஞ்சலின்
- 2019 இல் புதுக்கோட்டையை சேர்ந்த ஹரிஷ்மா
- 2019 இல் விழுப்புரத்தை சேர்ந்த மோனிஷா
- 2019 இல் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா
- 2019 இல் தேனியை சேர்ந்த ரிதுஸ்ரீ
- 2019 இல் மதுரையை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா
- 2019 இல் நாமக்கல்லை சேர்ந்த மோதிலால்
- 2019 இல் தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா
- 2020 இல் அரியலூரை சேர்ந்த விக்னேஷ்
- 2020 இல் கோவையில் சுபஸ்ரீ
- 2021 இல் சேலத்தை சேர்ந்த தனுஷ்
- 2021 இல் அரியலூரை சேர்ந்த கனிமொழி
- 2021 இல் வேலூரை சேர்ந்த சவுந்தர்யா
- 2022 இல் அரியலூரை சேர்ந்த நிஷாந்தினி
- 2022 இல் கரூரை சேர்ந்த ப்ரீத்தி ஸ்ரீ
- 2022 இல் தென்காசியை சேர்ந்த ராஜலட்சுமி
- 2022 இல் சென்னையை சேர்ந்த ஸ்வேதா
- 2023 இல்நெய்வேலியை சேர்ந்த நிஷா
- 2023 இல் சேலத்தை சேர்ந்த சந்துரு
- 2023 இல் சென்னையை சேர்ந்த ஜெகதீஸ்வரன்
இதுவரை மொத்தம் 23 மாணவ, மாணவிகள் உயிரிழந்துவிட்டனர்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications