பும்ராவின் மனைவி யார் தெரியுமா? அகமதாபாத்தில் பங்களா? ஆடம்பர கார்கள்.. கலக்கும் தம்பதி!
சென்னை: வெற்றி நாயகன் ஜஸ்ப்ரித் பும்ராவின் மீது பல பன்னாட்டு பிராண்ட் நிறுவனங்களின் கண் பார்வை விழுந்துள்ளது. ஆகவே, அவரது சொத்து மதிப்பு கூடிய விரைவில் எகஸ்பிரஸ் வேகத்தில் எகிறப்போகிறது. இப்போதைக்கு பும்ராவின் சொத்து மதிப்பு என்ன? அவரது பத்திரிகையாளர் மனைவிக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளது?
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது இந்தியா. கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து, அதாவது 2007க்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக இந்தியா தன் வசப்படுத்தி சாதனை புரிந்துள்ளது. இந்த வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன.

அதில் மிக முக்கியமான காரணம் வேகப்பந்து சூப்பர் ஸ்டார் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்தத் தொடரின் நாயகராகவும் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதுவும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் பவுலர் என்ற உலக சாதனையை பும்ரா நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
ஒரு டி20 உலகக் கோப்பையில் மிகவும் குறைந்த எக்னாமியை பதிவு செய்த வீரர் என்ற சுனிம் நரேனின் கடந்த 10 ஆண்டுகால சாதனையை உடைத்து பும்ரா புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஆகவே, இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண் பார்வையும் பும்ரா மீது விழுந்துள்ள இந்நிலையில் அவரைப் பற்றி அவரது மனைவி பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியின் பெயர் சஞ்சனா கணேசன். இவர் ஒரு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர். மேலும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கிறார். ஒப்பிடுகையில் பும்ரா அளவுக்கு இல்லை என்றாலும் சஞ்சனாவும் ஒரு பிரபலம்தான்.
இதன்மூலம் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய வீரர் தான் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த வெற்றிவாய்ப்புகள் பும்ராவை ஓவர் நைட்டில் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. பல பிராண்ட் நிறுவனங்களின் கண்கள் அவர் மீது விழ ஆரம்பித்துள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) கிரேடு A+ பிரிவில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் சேர்த்து, பும்ராவும் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இத்துடன் அம்பானிக்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் உடனான ஒப்பந்தம் இவரது வருவாயை மேலும் கணிசமாகக் கூட்டியுள்ளது.

கிரிக்கெட் உலகில் நட்சத்திர பிம்பமாக வலம் வரும் பும்ரா, தனிப்பட்ட வாழ்க்கையும் பல சுவாரஸ்யமான தகவல்களால் நிறைந்துள்ளது. கடந்த 2021 மார்ச் 15 அன்று சஞ்சனா கணேசனை பும்ரா திருமணம் செய்து கொண்டார். கோவாவில் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் அளவுக்கு மிகக் கட்டுப்பாடுகளுடன் அந்தக் கல்யாணம் நடந்தது. சஞ்சனாவை பும்ரா ஒரு செய்தியாளராகச் சந்தித்தார். அது பின்னர் மண வாழ்க்கை வரை இவர்களை அழைத்துச் சென்றது.
சஞ்சனா கணேசன் புனேவிலுள்ள சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் முடித்தவர். அதில் தங்கப் பதக்கம் தேர்ச்சி பெற்றவர். ஆரம்ப காலத்தில் இவர், ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். ஆனால், அவரது மனம் அதில் மட்டுமே அமைதி கொள்ளவில்லை. ஆகவே, லைம்லைட் வாழ்க்கை மீதான இவரது ஆர்வம் அதிகரித்தது. 2012 இல் ஃபெமினா ஸ்டைல் திவா, 2013 இல் ஃபெமினா மிஸ் இந்தியா ஆகிய அழகுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு அவர் தன்னை வளர்த்துக் கொண்டார்.
அந்தப் புகழ் வாழ்க்கை மட்டுமே சஞ்சனாவுக்கு சரியான தீனியைப் போடவில்லை. ஆகவே ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்தார். 2014 ஆம் ஆண்டு இவர் எம்டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவான ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் கலந்துகொண்டார். அதில் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. காயம் காரணமாக அதிலிருந்து வெகு சீக்கிரம் வெளியேறினார்.
இந்தப் பின்னடைவு அவரை முடக்கிவிடவில்லை. அதன்பின்னர் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளராக மாறினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் சேர்ந்து, 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போன்ற பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
இதன் மூலம் பல வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சஞ்சனாவுக்கு எளிமையாகக் கிடைத்தது. பலருக்கும் பரிச்சயமான முகமாக மாறினார். இந்தியன் பிரீமியர் லீக், இந்தியன் சூப்பர் லீக், பேட்மிண்டன் பிரீமியர் லீக் என பல முக்கிய போட்டிகளை அவர் தொகுத்தளித்தார். ஸ்போர்ட்ஸ்கீடா தகவலின்படி, சஞ்சனாவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 8 கோடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இவர் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை, சம்பளமாகப் பெறுகிறார் எனத் தெரிகிறது.
ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சனா கணேசன் தம்பதி அகமதாபாத்திலுள்ள ஒரு ஆடம்பரமான மாளிகை ஒன்றில் வாழ்ந்து வருகிறது. இதை பும்ரா 2021 இல் ரூ. 2 கோடிக்கு வாங்கினார். இது தவிர மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான ஒரு வீடும் உள்ளது. அடுத்தபடியாக உயர் தர வாகனங்கள் என்று பார்த்தால், மெர்சிடிஸ்-மேபேக் (ரூ. 2.3 கோடி), நிசான் ஜிடி-ஆர் (சுமார் ரூ. 2 கோடி), ரேஞ்ச் ரோவர் வேலார் (சுமார் ரூ. 87 லட்சம்) என சிலவற்றை வைத்துள்ளனர். மேலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (ரூ. 19 லட்சம்) ஒன்று உள்ளது.












Click it and Unblock the Notifications