நான் வச்ச டெஸ்டில் பாஸ் ஆகிட்டீங்க.. முதல் ஆளாக ஸ்டாலின் போட்ட போன்.. அமைச்சர்களிடம் கூட பேசலையாமே!
சென்னை: நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வென்றதும் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக ஒரு முக்கிய தலைக்கு போன் செய்து இருக்கிறாராம்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

இதில் 124053 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 56296 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10602 வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மெகா வித்தியாசத்தில் பாமகவை திமுக வீழ்த்தியதில் ரொம்பவும் மகிழ்ந்து போனார் ஸ்டாலின். அறிவாலயத்துக்கு வந்து அவரே கட்சியினருக்கு ஸ்வீட் கொடுத்து மகிழ்ந்தார். நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வென்றதும் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக ஒரு முக்கிய தலைக்கு போன் செய்து இருக்கிறாராம் .
யாருக்கு போன்: தேர்தல் ரிசல்ட் கிடைத்ததும், ஸ்டாலின் போட்ட முதல் ஃபோன், விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகமாணிக்குத் தான்.
பொறுப்பு அமைச்சர்கள் யாரிடமும் பேசாமல், சிகாமணிக்குத்தான் முதல் ஃபோன் போட்டு வாழ்த்தியிருக்கிறார். அப்போது, நான் வைத்த டெஸ்டில் பாஸ் பண்ணிட்டே என சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த வாழ்த்தை தன் தந்தை பொன்முடியிடமும், தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த மூத்த அமைச்சர்களிடமும் சொல்லி குதூகலப்பட்டிருக்கிறார் கௌதம சிகாமணி.
வாழ்த்து: இங்கே பொறுப்பு அமைச்சர்கள் இருந்தாலும் கௌதம சிகாமணிதான் தேர்தல் பணிகளை கவனித்துக்கொண்டார். தேர்தலுக்கான திட்டங்களை வகுத்தது, பிரச்சாரங்களை செய்தது இவர்தான். அதிலும் கள்ளக்குறிச்சி விவகாரம் இங்கே மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கே விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.
தமிழ்நாடு அரசியலில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் செய்ய முடியாத மிகப்பெரிய அரசியல் சாதனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் ஸ்டாலின் மிகப்பெரிய அரசியல் சாதனை ஒன்றை செய்துள்ளார்.
எப்படி தேர்வானார்?: விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்தவர் புகழேந்தி. வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் பெரும்பான்மை சதவீதம் பேர் வன்னியர்கள்தான். அதனால், இந்த முறையும் திமுகவில் வன்னியர் ஒருவருக்கே சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
திமுக பிளான்: கட்சித் தலைமையும் இது குறித்து சீரியஸ் காட்டி வந்தது. புகழேந்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாமா? அல்லது மாவட்ட திமுகவில் அணி சார்ந்த முக்கிய பொறுப்பில் உள்ள வன்னியர்களில் ஒருவரை தேர்வு செய்யலாமா? என நேற்று தீவிர ஆலோசனை திமுகவில் நடந்துள்ளது.
அப்போது அமைச்சர் பொன்முடி, என மகனுக்கு வாய்ப்புத் தாருங்கள். அல்லது நான் சுட்டிக்காட்டும் நபருக்கு வாய்ப்புத் தாருங்கள். வன்னியரல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்துக் காட்டுகிறேன் என அழுத்தமாக வாதிட்டிருக்கிறாராம். ஆனால், பொன்முடி பேச்சுக்கு மதிப்பளித்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என யோசித்த ஸ்டாலின், அப்போது, வன்னியர் ஒருவரை உங்கள் சாய்ஸாக சொல்லுங்களேன் என கேட்க அப்படித்தான் அன்னியூர் சிவா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications