கருணாநிதி இருந்திருந்தால்.. அப்படியே பூரிச்சு போயிருப்பாரு.. பாஜகவை கதறவிட்ட கனிமொழி.. திமுக சக்ஸஸ்
சென்னை: திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியில் அபார வெற்றி பெற்று சாதனையையும் புரிந்திருக்கிறார்..!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி, சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்.. இலக்கிய கூட்டங்கள் எங்கு நடந்தாலும், அதில் கனிமொழி முதன்மை வரிசையில் இடம்பெற்றிருப்பார்..
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்ற வெப்சைட்டையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.. எழுத்துக்களின் மீது தீராத காதல் கொண்ட கனிமொழி, "தி இந்து" நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.. இவரது சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சியானது உலக தமிழர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
கனிமொழி: குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட கனிமொழியின் அரசியல் பயணம், எத்தனையோ பெண்களுக்கு உத்வேகத்தை தந்து கொண்டிருக்கிறது.. தற்போது திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளதுடன், திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
ஒவ்வொருமுறையும் திமுக எம்பியாக தேர்வாகி டெல்லி செல்லும் கனிமொழி, தமிழக மக்களின் உரிமைக்காக மக்களவையில் குரல் கொடுத்து வருகிறார்.. பாஜகவை கடுமையாக எதிர்த்து, இவர் பேசும் பேச்சுக்கள், தேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றன.
அதற்கு பிறகு தன்னுடைய தொகுதியின் வளர்ச்சியிலும், புதுப்புது திட்டங்களிலும் கவனம் செலுத்தி, தூத்துக்குடியை குறைவின்றி வைத்து கொண்டார்.. புயல் வந்தபோதும்சரி, பெருமழை வந்தபோதும் சரி, தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தந்ததை தமிழகம் அறியும்.
கனிமொழி: இந்த முறை கனிமொழியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 பேர் போட்டியிட்டார்கள்.
எனினும் கனிமொழி 5,40,879 வாக்குகளை பெற்றுள்ளார். அத்துடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருமே டெபாசிட் இழக்க செய்திருக்கிறார்.. முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார் கனிமொழி .. இதன் மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட்டை காலி செய்த வேட்பாளர் என்ற தனிச்சிறப்பை கனிமொழி பெற்றுள்ளார்.
தமிழிசை: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தோற்கடித்திருந்தார் கனிமொழி.. இப்போது மீண்டும் தூத்துக்குடியில் வெற்றி பெற்று, டெல்லி சென்று மக்களவையில் திணறடிக்க போகிறார் கருணாநிதியின் செல்ல மகள் எம்பி கனிமொழி..!!
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications