தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மீண்டும் வெற்றி.. யார் இந்த முரளி? அவருடைய மகனா இவர்?
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தேனாண்டாள் முரளி யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் ராமநாராயணன். இவருடைய படங்கள் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
இவர் ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக் குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய படங்களுக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் காரைக்குடியில் பிறந்தவர். தமிழ் சினிமாவில் சுமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இவருடையதுதான் தேனாண்டாள் பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் மீனாட்சி குங்குமம் என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தது. 1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுக்குள் பாளையத்தம்மன், நாகேஸ்வரி, கோட்டை மாரியம்மன், அன்னை காளிகாம்பாள் உள்ளிட்ட பக்தி படங்களை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் ராம நாராயணன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு காலமானார். ஏவிஎம், ஜெமினி ஸ்டுடியோஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் வரிசையில் தேனாண்டாள் பிலிம்ஸை நிர்வகித்து வருபவர் ராமநாராயணனின் மகன் முரளி ஆவார். 2010ஆம் ஆண்டு பேய் படங்களை வாங்கி வெளியிட்டார்.
இவர் வெளியிட்ட அரண்மனை, காஞ்சனா 2, மாயா, டிமான்டி காலனி, ஸ்டிராபெர்ரி, ஜாக்சன் துரை உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதனிடையே முரளி ராமநாராயணனின் மனைவி ஹேமாவின் கீழ் இந்த நிறுவனம் மேடை நாடகங்களை அரங்கேற்றியிருந்தது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 100 ஆவது படமான மெர்சல் படத்தை முரளி தயாரித்தார். ஜிஎஸ்டி, இலவச மருத்துவமனை உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் இது வெளியானது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும். தெறி படத்தையும் தேனாண்டாள் நிறுவனம்தான் வெளியிட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு முரளி போட்டியிட்டார். இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி ராஜேந்தர் மற்றும் தேனப்பன் ஆகியோரை வென்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக முரளி தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டும் தன்னை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்று 2ஆவது முறையாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராகியுள்ளார். நேற்று நடந்த இந்த தேர்தலில் ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
சற்று தாமதமாக வந்த நடிகர் ராஜ்கிரணை வாக்களிக்க தேர்தல் அதிகாரி அனுமதிக்கவில்லை. இதனால் தேர்தல் நடந்த அடையாறில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. தேனாண்டாள் நிறுவனம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு மந்திர புன்னகை எனும் வெப் சீரிஸ் தயாரிக்கப்பட்டது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உதவி இயக்குநரும் மேஜிக் கலைஞருமான ராமன் சர்மா மெர்சல் படத்தில் பணியாற்றிய நிலையில் நிலுவை தொகை தரவில்லை என்பதால் தேனாண்டாள் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
இவ்வளவு பயமா.. கரூரில் பட்டி பார்முலா புகார்.. செந்தில் பாலாஜி பகிரங்க சவால் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications