பெரியாருக்கு 'பெரியார்' என்று பெயர் சூட்டியவர்கள் பெண்கள்! வரலாறு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
இன்று பெரியார் இல்லையே என்ற கவலை தனக்கு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: பெரியாருக்கு 'பெரியார்' என்று பெயர் சூட்டியவர்கள் பெண்கள் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய அவர் இந்த வரலாற்று தகவலை கூறினார்.
மேலும், இன்று பெரியார் இல்லையே என்ற கவலை தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் உரை வருமாறு;

மகளிர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் "உலக மகளிர் தினம்" கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச்-8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது. இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் தந்தை பெரியார் இல்லையே, இதைப் பார்ப்பதற்கு இல்லையே என்ற அந்தக் கவலைதான்.

பெரியார் இல்லை என்ற கவலை
இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

போற்றப்பட வேண்டிய பெண்கள்
இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள். மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அழைத்தார். போராட்டம் நடந்தால் தனது மனைவி நாகம்மையாரையும் - தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார் பெரியார்.
இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துத்தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள்.

பெரியார் என்று பெயர் சூட்டிய பெண்கள்
இன்னும் சொன்னால், தந்தை பெரியார் அவர்களுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தைத் தந்தது யார் என்று கேட்டீர்களென்றால், பெண்கள் தான். வடசென்னை பகுதியில் இருக்கின்ற ஒற்றைவாடி கலையரங்கத்தில் தான் அந்த விழாவை நடத்தி பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு 'பெரியார்' என்ற அந்தப் பட்டத்தை கொடுத்தார்கள். அது வரையில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்தான் என்று சொன்னார்கள். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அது வழங்கப்பட்டது.

சொத்தில் சம பங்கு
அதனுடைய 50-ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கிய தலைவர் தான் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications