ஸ்டாலின் முதல்வர்.. சபாநாயகர் யார் தெரியுமா?.. இனி சிரிப்பலையால் சிவக்க போகும் ஜார்ஜ் கோட்டை!
சென்னை: தமிழக சட்டசபையில் பொறுப்பேற்கவுள்ள திமுகவின் சபாநாயகர், துணை சபாநாயகர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது ஒரு உத்தேச பட்டியல் என வெளியாகியுள்ளது. இதன் நம்பகத்தன்மை தெரியவில்லை.
தமிழகத்தில் 14 ஆவது சட்டசபைக்கான தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் 140 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். தமிழகத்தின் 14 ஆவது சட்டசபையின் சபாநாயகர், துணை சபாநாயகர் யார் என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

திமுக
அதில் சபாநாயகர் பதவிக்கு திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இவர் காட்பாடி சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போட்டியிட்டு வென்றார்.

பொதுப் பணித் துறை
சுமார் 7 முறை காட்பாடி சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள துரைமுருகன் தற்போது 8-ஆவது முறையாக அதே தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சி காலத்தில் பொதுப் பணித் துறை அமைச்சராக பணியாற்றியவர்.

ஒட்டன்சத்திரம்
சபாநாயகராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டால் அவர் முதல்முறையாக அப்பதவிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுகிறார். அது போல் துணை சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாவார்.

தகவல்
இது தவிர திமுக அமைச்சரவையில் இடம் பெற போகும் நபர்கள் , அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுகவின் நம்பத் தகுந்த வட்டாரங்களிடம் கிடைத்த இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications