கமல், டிடிவி தினகரன் பிரிக்க போகும் வாக்குகள்.. அப்படி மட்டும் நடந்தால்.. கலக்கத்தில் 'ஒரு' கழகம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் எவ்வளவு வாக்கு சதவீதம் பெறுவார்கள், அவர்கள் பிரிக்க போவது யாருடைய வாக்குகள், அவர்களின் தனி தனி போட்டியால் யாரை அதிகம் பாதிக்கும் என்று பார்த்தால் நிச்சயம் அதிமுகவையே அதிகம் பாதிக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது.. அதன்படி பார்த்தால் கமல்ஹாசன் 7.1 சதவீத வாக்குகளும், டிடிவி தினகரன் 6.5 சதவீத வாக்குகளும் பெறுவார்கள். இரண்டு பேரும் சேர்ந்து கிட்டத்தட்ட 13.6 சதவீதம் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. இதர கட்சிகள் 11.1 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 43.2 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி 32.1 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு
வழக்கமாக தமிழகத்தில் சட்டசபை தேர்தகளில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள் ஆகியவை எடுபடும். இது தவிர 3வது அணியாக போட்டியிடும் கட்சிகள் பிரிக்கும் வாக்குகள் காரணமாக ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

கமல்ஹாசன்
எனவே இந்த வகையில் இந்த முறை அரசியல் களத்தில் வெற்றியை தீர்மானிக்க போவது டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் தலா 8 சதவீதம் அளவிற்கு வாக்குகளை பெற்றால் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளின் வெற்றி விகிதம் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும். உதாரணம்.. கடந்த முறை 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி. மக்கள் நலக்கூட்டணி பிரித்த வாக்குகள் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது திமுக. திமுக வெறும் 500 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

யாரை பாதிக்கும்
எனவே இந்த முறை சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் பெறும் வாக்குகள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் எவ்வளவு தொகுதிகளை வெல்வார்கள், ஆட்சியை பிடிப்பார்களா என்பது மே 2ம் தேதிதான் தெரியும் என்றாலும், கருத்துக்கணிப்புகள் படி பார்த்தால் இருவரும் பிரிக்கும் வாக்குகள் அதிமுக கூட்டணியையே அதிகம் பாதிக்கும் என்று தெரிகிறது.

தென்மாவட்டங்கள்
ஏனெனில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அதிகம் உள்ள கட்சி அமமுக. தென்மாவட்டங்களில் வலுவான வாக்குவங்கி வைத்துள்ள கட்சியாகும். இவர்கள் போன முறை இடைத்தேர்தலில் பிரித்த வாக்குகள் காரணமாக பெரியகுளம், ஆண்டிபட்டி, சோழவந்தான், திருப்பரங்குன்றம் உள்பட தென்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைய நேரிட்டது. எனவே அமமுகவிற்கு அதிக வாக்குகள் விழுந்தால் அது அதிமுகவையே கடுமையாக பாதிக்கும்

திமுகவிற்கு பாதிப்பா
கமல்ஹாசனை எடுத்துக்கொண்டால் நகர்புற வாக்குகளை, படித்த இளைஞர்களின் வாக்குகளை அதிகம் கவரக்கூடியவர் என்ற பிம்பம் உள்ளது. பொதுவாக நகர்புற படித்த இளைஞர்கள் வாக்குகள் திமுகவிற்கு தான் அதிகம் போகும். அப்படி பார்த்தால் திமுகவிற்கு தான் கமல் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று கருதப்படுகிறது. ஆனால் கமல் பிரிக்கும் வாக்குகள் அதிமுகவையே பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அதிமுகவை பாதிக்கும்
ஏனெனில் கமலை பாஜகவின் பி டீம் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பரப்புரை செய்கின்றன. நகர்புறங்களில் இந்த பிரச்சாரம் மட்டும் எடுப்பாட்டால் நிச்சயம் அதிமுக பாஜக கூட்டணியை பாதிக்கும். டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகிய இருவருமே பெறும் வாக்குகள் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications