Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வள்ளல்! இறப்பதற்கு முன் மயில்சாமியின் பாக்கெட்டில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? மகன்கள் உருக்கம்!

மயில்சாமியிடம் கடைசியாக இருந்த பணம் எவ்வளவு தெரியுமா- மகன்கள் கூறிய உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மயில்சாமியிடம் கடைசியாக இருந்த பணம் எவ்வளவு என்பது குறித்து அவருடைய மகன்கள் உருக்கமாக ஒரு தகவலை கூறியுள்ளனர்.

காமெடி நடிகர் மயில்சாமி ஆரம்பத்திலிருந்தே தனக்கென இல்லாவிட்டாலும் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர். இதை விவேக் உள்ளிட்ட பலரும் கூறியுள்ளனர்.

ஒரு முறை விவேக்குடன் நடிகர் மயில்சாமி இருந்த போது அவரிடம் உதவி கேட்டு யாரோ வந்தனராம். அப்போது அவர் அன்று சம்பாதித்த ரூ 5 ஆயிரத்தையும் அந்த நபரிடம் கொடுத்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்ல ஆட்டோவுக்கு காசு கொடுக்குமாறு விவேக்கிடம் கேட்டாராம்.

மனம் குளிர

மனம் குளிர

அந்தளவுக்கு அவர் சுயநலம் பார்க்காமல் பிறர் மனம் குளிர வேண்டும் என நினைப்பவர். அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில் கோட் சூட் , லேசாக சால்ட் பெப்பர் தாடி வைத்துக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இதுகுறித்து ஒன் இந்தியா பிலிமிபீட் சார்பில் தொடர்பு கொண்டு அவரிடம் கேட்ட போது அம்மா அதையெல்லாம் பெரிதாக்காதீர்கள். அது சும்மா ஃபன்னுக்காக எடுத்தது என்றார்.

பெரிதாக்காதீர்கள்

பெரிதாக்காதீர்கள்

அவர் பெரிதாக்கீர்கள் என கூறினாலும் அவருடைய லுக் வைரலானது. இந்த நிலையில் அவர் கடைசியாக கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தீவிர சிவ பக்தரான மயில்சாமி கடந்த சிவராத்திரி அன்று கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

இந்த நிலையில் அவருக்கு வீட்டில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டார் என்றனர். இவரது இறப்பால் திரையுலகமே அதிர்ந்தது.

காரணங்கள்

காரணங்கள்

இவருடைய இறப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து கடந்த மாதம் அவருடைய மகன்கள் பிரஸ்மீட் வைத்தனர். அதில் அவர்கள் கூறுகையில், எங்கப்பா எப்படி இறந்தார் என்பது குறித்து உண்மையே தெரியாமல் நிறைய யூடியூப் சேனல்கள் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டுள்ளன. அவர் அளவுக்கு அதிகமாக குடித்ததால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

உண்மையில் நடந்தது என்ன

உண்மையில் நடந்தது என்ன

ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்றால் கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்த போது அப்பாவுக்கு பசிக்கிறது என்றார், நான்தான் உணவு சமைத்து கொடுத்தேன். அதை சாப்பிட்டார், பிறகு சிறிது நேரத்தில் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்பது போல் இருப்பதாக சொன்னார். உடனே நான் குடிப்பதற்கு வெந்நீர் கொடுத்தேன். இதையடுத்து சிறிது நேரம் கழித்து நான் தூங்க போனதும் அம்மா என்னை வந்து அழைத்தார்.

மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சு விடுவதில் சிரமம்

அப்பாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் என அவரை போய் பார்த்ததில் தெரியவந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றார்கள். இதுதான் நடந்தது. இதைவிட்டுவிட்டு எதை எதையோ போடாதீர்கள். அப்பா விட்டுச் சென்ற பணியை நாங்கள் செய்வோம். அப்பாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகாது, அது ஆக்டிவ்வாக இருக்கும். அவர் செய்த உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தனர்.

ரூ 30

ரூ 30

இந்த நிலையில் மயில்சாமி தான் கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் மயில்சாமியின் மகன்கள் கலந்து கொண்டு அவர் குறித்து உருக்கமாக பேசினர். அவர்கள் பேசுகையில் மயில்சாமி இறக்கும் முன் அவர் நடித்த படத்திற்காக ரூ 30 ஆயிரம் சம்பளம் கிடைத்தது. அதில் 25 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கும் 4 ஆயிரம் ரூபாய் அசிஸ்டென்ட்களுக்கும், 1000 ரூபாய் எங்களுக்கும் கொடுத்தார். அதன் பிறகு அவர் கையில் வெறும் ரூ 30 இருந்தது என அப்பாவுடைய அசிஸ்டென்ட் கூறினார் என உருக்கமாக தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+