சத்யராஜின் மகள் திவ்யாவால்.. திமுகவில் ஒரு தரப்பு ஏக டென்ஷனாமே.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா, கடந்த வாரம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியில் இந்த இணைப்பு நடந்தது. அவர் இணைந்து சில நாட்கள் ஆன நிலையில், அவருக்கு இன்னும் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
மாநில அளவில் முக்கிய பதவி வாங்கித் தருகிறேன் என்று சேகர்பாபு உத்தரவாதம் அளித்திருக்கிறார். குறிப்பாக, உதயநிதி மாநில செயலாளராக இருக்கும் இளைஞரணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதாம். இளைஞரணியில் பெண்களுக்கு எப்படி பதவி கிடைக்கும் என்று கேள்வி வந்ததாகவும்,இளைஞரணியில் ஆண்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ; பெண்களும் உறுப்பினர்களா இருக்கிறார்களே என சொல்லப்பட்டதாம்.

அதனால், இளைஞரணியில் பொறுப்பு கிடைக்கும் என திவ்யா எதிர்பார்த்தாராம். ஆனால், உதயநிதி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது. அதனாலேயே அவருக்கு பதவி வழங்கப்படவில்லையாம். இந்த நிலையில், உதயநிதியை சந்திக்க அவரிடம் திவ்யாவிற்காக சேகர்பாபு நேரம் கேட்டுள்ளார். ஆனாலும் நேரம் ஒதுக்காமல் இருந்து வருகிறார் உதயநிதி. இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுகவின் எல்லை பகுதியில் தான் திவ்யா வசித்து வருகிறார்.
அதனால் மேற்கு மாவட்ட திமுகவில் திவ்யாவுக்கு பதவி வழங்க ஸ்டாலினிடம் சொல்லப்பட்டுள்ளதாம். இதனையறிந்து மேற்கு மாவட்ட திமுக உடன்பிறப்புகள் ஏக டென்சனில் இருக்கிறார்களாம். காரணம், வடசென்னை மாவட்ட அமைச்சரான சேகர்பாபு , திவ்யாவை கட்சியில் இணைக்கிற தகவலை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு பெயரளவில் கூட சொல்லவில்லையாம். இந்த நிலையில், சேகர்பாபுதானே கட்சியில் திவ்யாவை இணைத்தார். அதனால் அவரது மாவட்டத்தில் ஏதேனும் பொறுப்பைக் கொடுத்துக் கொள்ளட்டும். எங்க மாவட்டத்துக்குள் திணிக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் என இப்போதே உறுமுகிற சத்தம் மேற்கு மாவட்ட திமுகவில் கேட்கிறது.
பின்னணி:
திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். சிபி சத்தியராஜின் மூத்த சகோதரி ஆவார். அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக திவ்யா பணியாற்றி வருகிறார்.
இந்த அமைப்பை தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்ய திமுக உள்ளிட்ட சில கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட சாராரின் உணவு முறையை பள்ளிகளில் திணிக்க அவர்கள் முயல்வதாக புகார்களும் வைக்கப்பட்டன. (ஆனால் இந்த புகார்கள் நிரூபிக்கப்படவில்லை ) இப்போது அதே திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில், மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் திவ்யா சத்யராஜ் தொடங்கினார். இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு உதவக்கூடிய அமைப்பு ஆகும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்குவதற்காக இந்த அமைப்பை திவ்யா சத்யராஜ் தொடங்கினார். 2016ல் இவர் வீகன் உணவு பழக்கத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் திமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகள் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திவ்யா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பற்றிய முதுகலை தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவர் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் இலங்கை அகதிகளுக்கான ஆலோசனை அமர்வுகள் பற்றிய பயிற்சி வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துவது வழக்கம்.
மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகள் மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருந்ததும் கூட குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications