மேட்டரே வேறயாம்! அதிமுக "பை-லா" என்ன சொல்லுது? புதிய பதவி சாத்தியமா? பொதுக் குழு எதற்காக கூடுகிறது?
சென்னை: அதிமுக பொதுக் குழுக் கூட்டம் ஏன் கூடுகிறது? அந்த கூட்டத்தில் எது குறித்து பேசப்படவுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
அதிமுகவில் ஒற்றை தலைமை உச்சத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக் குழு கூட்டம் பற்றி விவாதிப்பதற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் அந்த கூட்டம் எப்படியோ ஆரம்பித்து சலசலப்பில் முடிந்தது. கூட்டம் முடிந்தாலும் அதன் தொடர் வினைகள் 3 நாட்களாக வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் திடீரென ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வந்ததால்தான் இத்தனை பரபரப்புக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

மாவட்டச் செயலாளர்கள்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்து ஒன் இந்தியா சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரையும் ஓபிஎஸ் தரப்பினரையும் கேட்டோம். முதலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறுகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக் குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒற்றைத் தலைமை
அப்போது திடீரென வெளியே இருந்து ஒற்றைத் தலைமை குறித்த கோஷங்களை ஓபிஎஸ் தரப்பினர் முழங்கினர். இதனால் எடப்பாடி தரப்பினரும் பதில் கோஷமிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என எங்களுக்கு தெரியாது. இவை நாங்கள் கேள்விப்பட்ட ஒன்று என்றனர்.

ஓபிஎஸ் தரப்பு
அது போல் ஓபிஎஸ் தரப்பினரிடம் கேட்ட போது, ஜெயலலிதாவால் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்தான். கட்சி பிளவுப்பட கூடாது என்பதற்காக முதல்வர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அரசு கொறடா பதவி உள்ளிட்டவற்றை விட்டு கொடுத்தார். இனியும் கட்சியையே விட்டுக் கொடுக்குமாறு கேட்டால் என்ன அர்த்தம்?

அமைதி
முதலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது எடப்பாடி தரப்பை சேர்ந்த ஆதி ராஜாராம்தான் வெளியே வந்து ஒற்றைத் தலைமை என கோஷமிட்டார். அவரை பார்த்துதான் நாங்கள் பதில் கோஷமிட்டோம். அது போல் எங்கள் அண்ணனின் சொந்த மாவட்டமான தேனியில் கூட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என போஸ்டர் ஒட்டினார்கள். அதற்கும் நாங்கள் அமைதி காத்தோம்.

யாரு தூண்டியது
ஆனால் ஆதி ராஜாராமன் கோஷமிட்டதை பார்த்தவுடன் எங்களால் பொறுக்க முடியவில்லை. அதனால் நாங்கள் கோஷமிட்டோம் என்றனர். இப்படியிருக்க பொதுக் குழு கூட்டம் எதற்காக கூடுகிறது என விசாரித்த போது ஒற்றைத் தலைமையை தேர்வு செய்ய இல்லை என்ற ஒரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் முதல் கிளைச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரை நடந்து முடிந்தது.

எதற்காக கூட்டம்
இதற்கான ஒப்புதலை வாங்குவதற்காகத்தான் இந்த பொதுக் குழுவே கூடுகிறது. இந்த பதவிகள் எல்லாம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அப்படியிருக்கும் போது இவற்றை எப்படி நீக்கிவிட்டு புதிய பதவிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர், பொதுச் செயலாளர் பதவிகளை கொண்டு வர முடியும் என நம்மிடம் எதிர் கேள்வியை எழுப்பினார்கள்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications