புரிஞ்சிடுச்சா.. அமித்ஷா ஏன் நேரா அங்கயே போறாரு தெரியுமா.. சிதறுதா திமுக ஓட்டு? அப்படினா கமல்ஹாசன்?
சென்னை: வடமாவட்டங்களில் அதிமுக, திமுக இரண்டுமே கடும் களப்பணியில் இறங்கி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்? பாஜக என்ன செய்ய போகிறது?
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஹாட்ரிக் வெற்றிக்காக பாஜக முயன்று கொண்டிருக்கிறது. இதற்கான வியூகங்களை கையில் எடுத்தும் வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் 10 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி உள்ளது.. இதற்காக தாங்கள் பெரிதாக கால்ஊன்ற முடியாத பகுதிகளில், தேர்தல் வியூகங்களை முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில், தென்மாவட்டங்களை போலவே, வடமாவட்டங்களில் பலத்தை கூட்ட வேண்டும் என்று பாஜக மேலிடமே உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது..
இதை மையப்படுத்தியே, பாஜக உள்துறை செயலாளர் அமித்ஷாவே நேரடியாகவே தமிழகத்துக்கு 11ம் தேதி வருகை தர போகிறார்.

பொதுக்கூட்டம்: வேலூரில் நடக்க உள்ள மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.. பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. . இதில், வேலூர் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதேபோல, தென்சென்னையில் இந்த முறை கூடுதல் கவனத்தை பாஜக செலுத்த போவதாக தெரிகிறது.
வாக்கு சதவீதம்: காரணம், பாஜகவின் செல்வாக்கு பெற்ற டாப் 10 தொகுதிகளில், தென் சென்னை தொகுதியும் ஒன்று... இந்த பகுதியில், தனித்து போட்டியிட்டே ஒரு லட்சம் வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது.. இதுதான், தென்சென்னையை குறி வைத்து பாஜக வியூகம் அமைக்க காரணமாம்.. இதற்காகவே, வருகிற 11-ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா, அன்றைய தினமே தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறாராம்.
அந்தவகையில், இந்த தொகுதியை கைப்பற்ற பாஜகவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்றே தெரிகிறது.. மேலும், இந்த தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்..

தென்சென்னை: இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி..
யாருடைய வாக்குகள்: அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. அதனால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.. அதனால்தான், இவைகளை எல்லாம் கணக்கு செய்து, மநீம கமல்ஹாசன் இந்த தொகுதியை குறி வைத்து வருவதாக செய்திகளும் கசிந்தன..
எப்படியும் காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைவார் என்கிறார்கள்.. அப்படி இணைய நேர்ந்தால், திமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட நேர்ந்தால், அது பாஜகவுக்கு செக் வைப்பது போல இருக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.. பல்வேறு வியூகங்கள் இப்படி றெக்கை கட்டி பறந்துவரும் நிலையில், அமித்ஷா நேரடியாகவே தென்சென்னைக்கு செல்வது, மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications