ஸ்விஸ் வங்கியில் பணம் போடவே அண்ணாமலை வெளிநாடு போகிறாரா? கொளுத்தி போடும் கே.எஸ் அழகிரி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலைக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதால் யாரைப்பற்றி வேண்டும் என்றாலும் ஒரு அரசியல் தலைவர் அப்படி பேசலாமா? என்று கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டட்தில் பங்கேற்பதற்காக வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம்.

தமிழகத்தில் தொழில்துறை, விவசாய மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியவர் காமராஜர். வைகை அணை உள்பட பல்வேறு அணைகள் கட்ட காரணமாக இருந்தவர் காமராஜர். தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு காமராஜர் தான் காரணம். பாரதிய ஜனதா தலைமையிலா மத்திய அரசு 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்காக புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.
சனாதனத்தை பேசுங்க: தற்போது செயல்படுத்தும் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கியதுதான். மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகியும் வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்பதற்கு இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மொரீசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலைக்கு என்ன ஆதாரம் இருக்கிறது.
உங்களுக்கு டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதால் யாரைப்பற்றி வேண்டும் என்றாலும் ஒரு அரசியல் தலைவர் அப்படி பேசலமா? அதில் நாகரீகம் பண்பாடு இருக்கா... உங்க அரசியலை பேசுங்க.. கொள்கையை பேசுங்க.. சனாதனத்தை பேசுங்க... இதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். அதை விட்டு விட்டு மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது.
விஜய் வந்தால் வரவேற்போம்: நான் சொல்கிறேன். அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு போவதற்கு காரணம் என்ன? இங்கு இருக்கிற பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு இருக்கிறார் என்று நான் சொல்கிறேன். இது அரசியல் ஆகிவிடுமா? பாஜகவின் அமைச்சரவையில் கூட 33 அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்ட போது அவர் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமை தொகை 80 சதவீத பெண்களுக்கு கிடைக்கும். எனவே வெறுமனே குற்றம் சாட்டக் கூடாது. விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்த நாளன்று அவர் இரவு நேர பாடசாலையை தொடங்கியுள்ளதை காங்கிரஸ் வரவேற்கிறது. பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் மக்கள் எதிர்கின்றனர். " இவ்வாறு அவர் கூறினார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications