6 மணிக்கு அண்ணாமலை.. 4 மணிக்கு உதயநிதி, சுரேஷ் கோபி.. 3 மணிக்கு ஓபிஎஸ்.. அட சென்னையே குலுங்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு இன்று அடுத்தடுத்து பல தலைவர்கள் வர உள்ளனர். பல்வேறு பயண திட்டங்கள் காரணமாக இவர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலையில் அண்ணாமலை படிக்க உள்ளார். இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலை இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.

Udayanidhi Stalin Annamalai

இந்த பயணத்திற்கு முன்பாக கட்சி அளவில் அண்ணாமலை சில கூட்டங்களை நடத்த உள்ளார். பாஜக உட்கட்சி அளவில் சில முக்கியமான கூட்டங்களை நடத்த உள்ளார். இதற்காக அண்ணாமலை இன்று கோவையில் இருந்து சென்னை வருகிறார்.

அண்ணாமலை இன்று மாலை 6 மணியளவில் சென்னை வருகிறார். அவர் அதன்பின் பாஜக அலுவலகம் சென்று சில ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் பயணம்; ஒபிஎஸ் இன்று பிற்பகல் 3 மணியளவில் மதுரையிலிருந்து சென்னை வருகிறார். நேற்று அம்பானி வீட்டு திருமண விழா நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி நடத்திய ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சி நாடு முழுக்க கவனம் ஈர்த்து உள்ளது.

இதற்கு சென்ற ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து மதுரை வந்தார். இந்த நிலையில் ஒபிஎஸ் இன்று பிற்பகல் 3 மணியளவில் மதுரையிலிருந்து சென்னை வருகிறார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளது. எடப்பாடி கையைவிட்டு எங்கே அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். 6 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை போய் சந்தித்து இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்தால் எடப்பாடியை நீக்கிவிடுவார்கள். எடப்பாடியை பொதுக்குழுவை கூட்டி நீக்கிவிடுவார்கள். அடுத்து அதுதான் நடக்கும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் சென்னை வருகை கவனம் பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாளான இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்ற நிலையில் இன்று மாலை திரும்பி சென்னை வருகிறார். உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் மதுரையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

இது போக அமைச்சர் சுரேஷ் கோபி மாலை 4 மணியளவில் சென்னை வருகிறார். மத்திய அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர் சென்னை வருகிறார். இது சாதாரண ஷெட்யூல்தான். ஆனால் மொத்தமாக சேர்த்து அடுத்தடுத்து தலைவர்கள் சென்னைக்கு வருவது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+