ஆனால் அதிமுக தொண்டனாக இருப்பது கஷ்டம்தான்.. கடந்த 1 வாரத்தில் மட்டும்.. எவ்வளவு நடந்திருக்கு பாருங்க
சென்னை: கடந்த 1 வாரமாக அதிமுகவில் ஏகப்பட்ட களேபரங்கள் நடந்து வருகின்றன. அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள், ஏன் கட்சியில் உள்ளவர்களே கணிக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்து சுவாரசியமான திருப்பங்கள் நடந்து வருகின்றன. கடந்த 1 வாரத்தில் மட்டும் அதிமுகவில் என்னவெல்லாம் நடந்தது என்று இங்கே பார்க்கலாம்.
எடப்பாடி செங்கோட்டையன் பயணம்
கடந்த வாரம்தான் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அமித் ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையன் பயணம்
இப்படிப்பட்ட நிலையில்தான், அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் கடந்த வாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
சமீபத்தில்தான் தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் உடன் டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு நடத்தினார். எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு காரணமாக தனக்கு ஏற்பட்ட "சில நெருக்கடி" தொடர்பாக செங்கோட்டையன் நிர்மலா சீதாராமனிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஏற்பட சில பிரச்சனைகள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்.. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எடப்பாடி மறுப்பு
ராமேஸ்வரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தைத் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க நேற்று ராமேஸ்வரம் வருகிறார் மோடி. இவரை பிரமாண்டமாக வரவேற்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வரிசையில் இருக்கிறார்கள். ஆனால் இவரை சந்திக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டாராம். செங்கோட்டையன் - நிர்மலா சந்திப்பு காரணமாக அப்செட் ஆன எடப்பாடி மோடியை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
வேறொரு சந்திப்பு
சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முன்னாள் எம்பியான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதிமுக ஒருங்கிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என்று தொடர்ந்து பேசி வந்த கேசி பழனிசாமி திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரண்டாவது மீட்டிங்
இதையடுத்து இரண்டாவதாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை பொருத்தமட்டில் அவர் ஏற்கெனவே டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் சந்தித்து பேசியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கோட்டையன் தனி
இன்று சட்டசபையில் அதிமுக நிர்வாகிகள் வெளியேறினர். அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் மட்டும் அவை நடவடிக்கையில் பங்கேற்றார். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் செங்கோட்டையன் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார். இது எடப்பாடிக்கு எதிரான செங்கோட்டையனின் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது.
குழப்பம்
1. ஒரு பக்கம் எடப்பாடி - அமித் ஷா சந்திக்கிறார்கள். இவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். நிறைய விஷயங்களை ஆலோசனை செய்கிறார்கள்.
2. ஆனால் அதே எடப்பாடி.. செங்கோட்டையன் - நிர்மலா சந்திப்பு காரணமாக அப்செட் ஆகி மோடியை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
3. இன்னொரு பக்கம் செங்கோட்டையன் ஏன் பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். ஏன் நிர்மலாவை சந்திக்கிறார் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம்












Click it and Unblock the Notifications