அமைச்சராகி வீட்டிற்கு போகும் முன் பதவி பறிப்பு.. பிடிஆரை விடுங்க.. அன்று ஜெயலலிதா அப்படி செய்தது ஏன்
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றங்கள் குறித்த செய்திகள் தீவிரமாக பகிரப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் மேற்கொண்ட சில அமைச்சரவை மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
பிடிஆர்:
இதில் பிடிஆர் மாற்றம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றங்கள் குறித்த செய்திகள் தீவிரமாக பகிரப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் மேற்கொண்ட சில அமைச்சரவை மாற்றங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.,
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2011 மற்றும் 2014 ஆட்சி காலங்களில் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதை வழக்கமாக இருந்தார். இரவில் தூங்க போகும் அமைச்சர்கள் காலையில் எழுந்து பாத் ரூம் போகும் தங்களுக்கு அமைச்சர் பதவி இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அப்போது நிலைமை இருந்தது.
முக்கியமாக பெரிய பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை எல்லாம் ஜெயலலிதா நிமிடத்தில் தூக்கி அடித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. சட்டசபையில் நன்றாக பேசுகிறார், திமுகவை விமர்சனம் செய்கிறார் என்பதற்காக எல்லாம் பெரிய அமைச்சரவை போஸ்டிங்குகளை ஒரே நாளில் ஜெயலலிதா சில புது முகங்களுக்கு தூக்கி கொடுத்த சம்பவங்களும் நடந்து உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் 2014ல் ஆட்சிக்கு வந்து வெறும் 4 மாதங்களில் 5 முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றிய சம்பவங்கள் கூட அப்போது நடந்தன. உதாரணமாக 5 முறை அமைச்சரவையை மாற்றிய ஜெயலலிதா 2 அமைச்சர்களை நீக்கினார்.
அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டு ஒரு வாரமே ஆகும் முன் அவர்கள் நீக்கப்பட்டனர்.
அதன்பின் 6வது முறையாக சில நாட்களில் மீண்டும் அமைச்சரவையை மாற்றிய ஜெயலலிதா, கேபி முனுசாமியை அமைச்சரவையில் சேர்த்த ஒரு மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்தார்.
எம்எல்ஏவாக இருந்த கேபி முனுசாமி தொழிலாளர் அமைச்சராக பதவி ஏற்று பின்னர் 1 மணி நேரத்தில் நீக்கப்பட்டார். தொழிலாளர் அமைச்சராக மாலை பதவியேற்ற முனுசாமி, ஆளுநர் மாளிகையில் சந்தோசமாக போட்டோ எடுத்துவிட்டு வீட்டிற்கு செல்லும் முன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. வீட்டிற்கு அவர் ஆசையாக போகும் முன் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அன்று அந்த கேபி முனுசாமியை நீக்க காரணமே சொல்லப்படவில்லை. அவர் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அவர் கட்சி விதிகளை மீறிவிட்டதாக கூறப்பட்டது.
மாற்றம் இல்லை
ஆனால் அந்த அளவிற்கு எல்லாம் தேவையின்றி அமைச்சரவை மாற்றங்கள் இப்போது செய்யப்படுவது இல்லை.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று சிறியதும், பெரியதுமாக இதுவரை 4 முறை அமைச்சரவை மாற்றங்களை செய்து இருக்கிறார். அதில் கடைசியாக செய்த இரண்டு அமைச்சரவை மாற்றங்களும் மிகப்பெரியது ஆகும்.
கடந்த வருடம் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். டிசம்பர் மாதம் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.
ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பின் நேற்று ஒருமுறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications