வேலூரே நெளிந்தது.. கி.வீரமணி முகமே மாறிடுச்சு.. "நானும் எதிர்பார்க்கல" ஸ்டாலின் வருத்தம்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவில் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன். அவர் வருத்தம் தெரிவித்ததன் பின்னணியில் என்ன நடந்தது? இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன், அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்.. சட்டசபையில் இவர் இடம் பெற்றிருந்தாலே, அன்றைய அவையே கலகலப்பாக இருக்கும்... மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து வேறு எதையாவது சொல்லிவிடுவார், இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா...

Do you know why DMK Sr Leader Durai Murugan apologized and what did MK Stalin, K Veeramani say

கலகல துரைமுருகன்: எப்போதுமே துரைமுருகன் பேச்சை ரசித்து கேட்பாராம்.. அவரது பாடி லேங்குவேஜை அடிக்கடி சொல்லி ஜெயலலிதா கிண்டல் செய்வதும் உண்டு. அந்தவகையில், கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் பலர், துரைமுருகனின் சட்டசபை பேச்சுக்கு ரசிகர்களாகி போனதும் உண்டு.

கலகலப்பு என்றில்லை, அழுகை, நெகிழ்ச்சி என்றாலும்கூட, துரைமுருகன் கண்கலங்கிவிடுவார்.. அதேசமயம், துரைமுருகனின் பேச்சுக்கள் சில சமயம் சர்ச்சையாகி போவதுண்டு.. அப்படித்தான் இப்போது மணியம்மை விஷயத்திலும் பேசியிருந்தார்.

வேலூர்: வேலூரில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய சீனியர் மந்திரி துரைமுருகன், பெரியார் மற்றும் மணியம்மையை குறித்து சர்ச்சையான ஒரு வார்த்தையைத் தனக்கே உரிய பாணியில் பேசினார். அவரது பேச்சு தி.க. மற்றும் திமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொது வெளியில் இந்த பேச்சு பல்வேறு தளங்களில் சர்ச்சைகளை உருவாக்கியது. பெரியார் பெருந்தொண்டர்கள், துரைமுருகனின் பேச்சை கண்டித்திருந்தனர்.

ஆசிரியர் வீரமணி: இந்த நிலையில், தி.க. வின் தலைவர் ஆசிரியர் வீரமணி, மிகவும் வருத்தமடைந்தார். முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட வீரமணி, "துரைமுருகனிடமிருந்து இப்படிப்பட்ட பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. வயதாக ஆக கண்ணியமும், பேச்சில் தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அது துரைமுருகனிடம் மிஸ்ஸாகி வருகிறது. நமக்கு எல்லோருக்குமான தலைவர் பெரியாரை பற்றி சிறுமை படுத்தும் விதமாக நாமளே பேசலாமா?

அண்ணாவை பற்றி அண்ணாமலை சிறுமைப்படுத்தியதற்கும், பெரியாரை பற்றி துரைமுருகன் பேசிய பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. துரைமுருகனை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள்" என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.

துரைமுருகன்: அதற்கு முதல்வர் ஸ்டாலின், "அவருடைய பேச்சில் நானும் அதிர்ச்சியடைந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், இதை தவிர்த்திருக்க வேண்டும் என அவரிடம் அப்போதே சொன்னேன். மறுபடியும் இன்னொரு முறை அவரிடம் சொல்கிறேன். நீங்களும் ஒருவார்த்தை அவரிடம் பேசிவிடுங்கள்" என்றாராம்..

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும், வீரமணியும் இதுகுறித்து துரைமுருகனிடமே பேசியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தாராம் மூத்த தலைவர் துரைமுருகன்.

ஏற்கனவே, திமுகவில் சில மூத்த அமைச்சர்கள் அடிக்கடி சர்ச்சைகளை உதிர்த்துவிடுவது குறித்து, முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதாம். இதனால், தொகுதிக்குள் நிர்வாகிகள் அப்செட் ஆகிவிடுவதாகவும், தேர்தல் சமயத்தில் இப்படியான சர்ச்சைகளை பேச்சுக்களை சீனியர்கள் தவிர்த்தால்தான், தொண்டர்கள் இறங்கி வேலை பார்க்க முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+