ஃபிரிட்ஜ்ஜில் சத்தம் வருதா? அப்ப கவனமா இருங்க.. பிரிட்ஜில் இந்த அளவு ரொம்ப முக்கியம்! சூப்பர் டிப்ஸ்
சென்னை: உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் வித்தியாசமான சத்தம் கேட்குதா? சில ஃபிரட்ஜ்கள் வெடிக்க என்ன காரணம் தெரியுமா?
வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜில் சத்தம் கேட்பது இயல்புதான்.. ஆனால், கோடை காலத்தில் வித்தியாசமான சத்தம் கேட்கும்.. அல்லது வழக்கத்துக்கு மாறான சத்தம் கேட்டால் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜில் எங்கிருந்து சத்தம் வருகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, பிரிட்ஜ்ஜின் அடிப்பகுதியிலிருந்து சத்தம் வந்தால், வடிகால் தொட்டியில் சிக்கல் இருக்கலாம். எனவே, அதை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்த வேண்டும்.
பிளேடுகள்: ஃபிரிட்ஜில் பின்பக்கத்திலிருந்து சத்தம் வந்தால், ஸ்டெப்லைசரில் ஏதாவது கோளாறு இருக்கலாம்.. ஸ்டெப்லைசரில் உள்ள பிளேடுகளில் தூசி இருந்தாலும் இப்படி சத்தம் வரலாம். அல்லது கம்ப்ரசரில் ஏதாவது கோளாறு இருக்கலாம்..
அதேபோல, ஃப்ரிட்ஜ்ஜுக்குள்ளிருந்தே கிரீச் போன்ற சத்தம் கேட்டாலும், ஃப்ரீசரிலிருந்து கிளிக் போன்ற சத்தம் கேட்டாலும், அதிலிருக்கும் வால்வு தளர்வாகி இருக்கலாம்.. ஒயர் ஏதாவது துண்டிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு உடனடியாக எலக்ட்ரீஷியனை அழைத்து வந்து சரிசெய்ய வேண்டும். ஆனால், நன்றாக பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே இதுபோன்ற மின்சாதனங்களை சர்வீஸ் செய்ய தர வேண்டும்.
பழைய மாடல்: அதேபோல, ஃப்ரிட்ஜ்களை முறையாக பராமரிக்க வேண்டியிருக்கிறது.. பழைய மாடல்களில் உள்ள ஃப்ரிட்ஜ்களில், வாயுவின் அழுத்த அளவு 130 என்ற அளவில் இருந்த நிலையில், இப்போதுள்ள புதிய மாடல்களில் 230-லிருந்து 240 வரையிலான உயர் அழுத்தத்தில் வாயு அடைக்கப்பட்டிருக்கிறதாம்.. இப்படியிருக்கும்போது, கம்ப்ரஸரில் உள்ள கேஸ் குழாய்களில், அடைப்பு ஏற்பட்டால், ஃபிரிட்ஜ்கள் வெடிக்க காரணமாகின்றன.
எப்போதுமே, வாயு அழுத்ததத்திற்கேற்ப கேஸ் குழாய் இருக்க வேண்டுமாம்.. ஆனால், பழைய மாடல்களில் உள்ள குழாய்களின் அளவையே, புதிய மாடல் ஃப்ரிட்ஜ்களிலும் பயன்படுத்துவதால்தான், கம்ப்ரஸர் சூடாகி விடுவதுடன், இப்படியான விபத்துகள் ஏற்படுதாக கூறுகிறார்கள்.
அட்வைஸ்: எனவே, கம்ப்ரஸரில் எந்த அளவுக்கு வாயு அடைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஃப்ரிட்ஜ் நிறுவனம் சொல்கிறதோ, அந்த அளவு வாயுதான் அடைக்க வேண்டுமாம்.. அதைவிட முக்கியமாக, மின்கசிவு ஏற்பட்டாலோ, மின்விநியோகம் எப்போதுமே சீராக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications