"டேஞ்சரஸ்" எடப்பாடி பழனிசாமி.. ஸ்பாட்டுக்கே கிளம்பி போறார்.. என்ன நடக்க போகுதோ.. கவனிக்கும் கட்சிகள்
சென்னை: அடுத்தடுத்த அதிரடிகளை சளைக்காமல் நடத்தி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் தரப்புக்கு இன்னொரு ஷாக் தரப்போகிறார்.. இன்று தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.. இதையடுத்து, அதிமுகவே பரபரத்து காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று மாலை அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதற்காக ஒரத்தநாடு பஸ் ஸ்டாண்டு அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது... இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் தீவிரமாக செய்து வருகிறார்.
பேட்டி: இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கட்சியின் பொதுச்செயலாளராகி முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அதன்படி நடக்க உள்ள பிரம்மாண்டமான ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.. அவர் முன்னிலையில், ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடக்கிறது.
காமராஜ்: தஞ்சை மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி, திருவையாறு, திருக்கருகாவூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனால், நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று காமராஜ் கூறியிருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே, டெல்டா பகுதியை குறி வைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. எனினும், ஓபிஎஸ்ஸூக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வருவது மூத்த தலைவர் வைத்திலிங்கம்தான்.. அதனால்தான் வைத்திலிங்கத்தை இழுக்க எடப்பாடி தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.. ஆனால், வைத்திலிங்கத்தின் விசுவாசத்தை கண்டு, எடப்பாடி தரப்பே மிரண்டு போய்விட்டதாம்..
எடப்பாடி டார்கெட்: டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்த அளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், எடப்பாடிக்கு டெல்டா இப்போதுகூட கலக்கத்தையே தந்து வருகிறது.. அதனால்தான், வைத்திலிங்கத்தின் செல்வாக்கை வீழ்த்தி, அந்த இடத்துக்கு மாஜி அமைச்சர் காமராஜை கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்..
இதற்காகவே, கடந்த மாதம் வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, காமராஜ் மகன் திருமண விழாவிலும் கலந்து கொண்டு"எவனாலும் அதிமுகவை தொட முடியாது" என்று வைத்திலிங்கம் தரப்பை பார்த்து சீறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இதற்குபிறகுதான், ஒரத்தநாட்டில் டிடிவியின் வலதுகரமாக இருந்த அமமுக மாவட்டச் செயலாளர் சேகரையும் அதிமுகவுக்குள் கொண்டு வந்தார் காமராஜர்.
டெல்டா குறி: இப்படி டெல்டாவுக்கு ஏற்கனவே குறி வைத்து காய்நகர்த்தி வரும்சூழலில், மீண்டும் டெல்டாவையே குறி வைத்து இன்றைய தினம் பொதுக்கூட்டமும் நடக்கிறது. இதற்கான முனைப்பில்தான், காமராஜும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. வைத்திலிங்கம் இடத்தை காமராஜ் ஈடுகட்டுவாரா? அதிமுகவுக்கான வாக்கு பலத்தை எடப்பாடி பழனிசாமி டெல்டாவில் பெறுவாரா? என்று தெரியவில்லை.. ஆனால், இன்றைய தினம் நடக்க போகும் கூட்டத்தை ஓபிஎஸ், + தினகரன் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
வைத்திலிங்கம்: 2 நாட்களுக்கு முன்பு வைத்திலிங்கம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, "ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார்.
விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல்அதிமுக ஆட்சி மலரும். அதற்காக தான் ஓபிஎஸ் பாடுபட்டு வருகிறார். திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓபிஎஸ் அழைப்பு விடுப்பார்" என்று கூறியிருந்தார்.. வைத்திலிங்கத்தின் இந்த பேட்டியானது, எடப்பாடி தரப்பினை அதிர செய்ததாக கூறப்படுகிறது. அநேகமாக இன்றைய கூட்டத்தில், ஓபிஎஸ்ஸூக்கான பதிலடியை எடப்பாடி தருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications