எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் ஆடியோவை வெளியிட்ட நாஞ்சில் கோலப்பன்.. நீக்கிய ஓபிஎஸ்.. ஏன் என்னாச்சு?
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்பாக பொன்னையன் பேசிய ஆடியோவை நாஞ்சில் கோலப்பன் வெளியிட்டதை அடுத்து அவர் ஓபிஎஸ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒற்றை தலைமை பிரச்சினையால் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என!. ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தது.

ஓபிஎஸ் நடத்திய சட்டபோராட்டங்களில் எடப்பாடிக்கு சாதகமாகவே தீர்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக லெட்டர் பேடு, அதிமுக கொடி என வலம் வருகிறார். மேலும் ஆகஸ்ட் 20இல் அதிமுக சார்பில் எடப்பாடி மாநாடு நடத்தும் அதே தேதியில் ஓபிஎஸ்ஸும் மாநாடு நடத்துகிறார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள நாஞ்சில் கோலப்பன் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுவது போன்ற அந்த ஆடியோ உள்ளது. அதில் அதிமுக மூத்த நிர்வாகிகளின் செயல்பாடுகளை பொன்னையன் கடுமையாக விமர்சிப்பது போன்று இருந்தது.
இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாஞ்சில் கோலப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அப்போது அதிமுக நிர்வாகி ஆடியோ வெளியிட்டதால் பெரும்பாலான நிர்வாகிகள் என்னிடம் பேசவே பயப்படுகிறார்கள். என் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள்.
இதனால் நான்நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டேன் என கோலப்பன் தெரிவித்திருந்தார். இதையடுத்து நாஞ்சில் கோலப்பன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நாஞ்சில் கோலப்பனை ஓபிஎஸ் நீங்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர், திரு. நாஞ்சில் K.S. கோலப்பன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications