பக்ரீத் பண்டிகை.. ரூ 6 லட்சத்திற்கு விலை போன ஒரே ஒரு ஆடு.. அப்படி என்ன ஸ்பெஷல்! உயிரே...!
சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி நடிகர் ஷாரூக்கானின் பெயர் கொண்ட ஆடு எத்தனை லட்சத்திற்கு விலை போனது தெரியுமா?
இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இது ஈகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இப்ராஹிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றுகிறது.
இந்த பண்டிகையின் போது இறைச்சி வாங்க முடியாத ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு தாம் சாப்பிட வேண்டும் என்பதுதான் சாராம்சம். அந்த வகையில் ஆடு, மாடு, ஒட்டகம், என எந்த கறியாக இருந்தாலும் அதை 3 பங்காக போட வேண்டும்.

அதில் ஒரு பங்கு அண்டை வீட்டாருக்கும், மறு பங்கு ஏழை எளியவர்களுக்கும் மூன்றாவது பங்கு தன் குடும்பத்தாருக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பண்டிகை பொதுவாக அண்டை வீட்டாருடன் நட்புறவையும் நல்லுறவையும் பேணிக் காப்பதே ஆகும். பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை பலியிட்டு அதை சமைத்து ஏழை எளியவர்களுக்கு கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இதனால் சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிகரித்தது. சில சிறப்புமிக்க ஆடுகள் லட்சக்கணக்கில் போனது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெயர் கொண்ட ஆடு பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ 6 லட்சத்திற்கு விலை போனது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சந்தையில் ஆடுகள், மாடுகள் விற்பனை ஜோராக நடந்தது.
குறிப்பாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெயர் கொண்ட அஜ்மீரி இன ஆடு ஒன்று மட்டும் ரூ 6 லட்சத்திற்கு விலை போனது. இதனால் ஆட்டின் உரிமையாளர் இர்பான் மகிழ்ச்சி அடைந்தார். தான் வளர்க்கும் ஆடுகளுக்கு பாலிவுட் நடிகர்களின் பெயர்களை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் இருந்த மற்றொரு ஷாரூக்கான் ஆடு ரூ 2.15 லட்சத்திற்கு விலை போனது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 786 என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று ரூ 1 கோடிக்கு விலை போனது. ஆனால் அந்த ஆட்டைதான் விற்க மாட்டேன் என அதன் உரிமையாளர் கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார். 786 என்பது முஸ்லீம்களின் திருக்குரானில் வரும் முக்கியமான மந்திரம் என கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications