கிணற்றடியில் அம்மா பண்ண காரியம்.. அதுவும் குழந்தையை வைத்து.. உச்சிக்கு போன ஆசை.. என்ன கொடுமை பாருங்க
சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.. பொதுமக்களும் திரண்டு வந்து, கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.. இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.
நாளுக்கு நாள் ரீல்ஸ் மோகம், சிறியவர்களைவிட, பெரியவர்கள்தான் அதிகம் பிடித்து ஆட்டுகிறது.. கடற்கரையில், தண்டவாளங்களில், சாலைகளில், மலை உச்சிகளில் என ஆபத்தான இடங்களில் ரீல்ஸ்களை எடுப்பது பெருகிவருகிறது. இதனால் எத்தனையோ விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

பல உயிர்கள் பறிபோன நிலையிலும், இன்ஸ்டா மீதான மோகம் குறையவே இல்லை.. அதேபோல, பிராங்க் வீடியோ என்ற பெயரிலும், இளைஞர்களின் ரீல்ஸ் அட்டகாசம் எல்லை மீறிவிட்டது...
புலி பொம்மைகள்: அட்டை பாம்பு, புலி பொம்மைகளை வைத்துக் கொண்டு, பொதுமக்களை படுத்தும் பாடு பெருகி கொண்டே செல்கிறது. ரீல்ஸ் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளும் பேராசையில் எத்தனையோ பெரியவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
4 நாட்களுக்கு முன்புகூட, உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் மீது, இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்து, பலருக்கும் கலக்கத்தை தந்துவிட்டார்.
வாழ்வாதாரம்: வயதான காலத்திலும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக, அந்த தாத்தா, சைக்கிளில் விற்பனை பொருட்களுடன் சென்று கொண்டிருந்தார்.. அப்போது பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர், ஸ்பிரேயை அடித்து ரீல்ஸ் எடுத்துள்ளார்... இந்த ரீல்ஸை பார்த்ததுமே, ஒட்டுமொத்த இணையதளமும் கொந்தளித்துவிட்டது.. கண்டனங்களையும், புகார்களையும் பதிவிட்ட நிலையில், உடனே போலீசார் தலையிட்டு, இதுகுறித்து விசாரித்தனர்.
அந்த இளைஞர் பெயர் வினய் யாதவ், சொந்த யூடியூப் வைத்துள்ளதால், லைக்ஸ்களை அள்ளுவதற்காக, இப்படி தாத்தா மீது ஸ்பிரே அடித்தது தெரியவந்தது. இனிமேல், ரீல்ஸ் எடுக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவரை துன்புறுத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசாரும் உடனடியாக எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
கைக்குழந்தை: அப்போதுகூட இந்த மோகம் குறையவில்லை.. இதோ ஒரு பெண், தன்னுடைய கைக்குழந்தையுடன் கிணற்றடிக்கே சென்றுவிட்டார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த மக்களையும் பதற செய்து வருகிறது.
Family court in custody case: Only mother can love child more. Even more than father.
— Raw and Real Man (@RawAndRealMan) September 18, 2024
Le mother:#ParentalAlienation pic.twitter.com/mc1kl5ziFj
அந்த வீடியோவில், அது ஒரு பழமையான கிணறு போல காணப்படுகிறது.. அந்த கிணற்றடியில் ஒரு பெண் உட்கார்ந்து, தன்னுடைய குழந்தையை காலை பிடிக்க வைத்து டான்ஸ் ஆடுகிறார்..
பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது.. அந்த பாட்டுக்கேற்றபடி, டான்ஸ் மூவ்மென்ட் செய்கிறார் அந்த பெண்.. ஒரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டே, இன்னொரு கைகளால், நடன அசைவுகளை புரிகிறார். அதுவும், கைகளை மாறி மாறி ஆட்டி அசைத்து வாயசைத்து டான்ஸ் ஆடுகிறார்.. அம்மா ரீல்ஸ் வீடியோ எடுக்க, அந்த குழந்தையோ, அம்மாவின் கால்களை பயத்துடன் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது..
கேள்விகள்: இந்த வீடியோவை பார்த்த பலரும் கொந்தளித்துப்போய், தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ரீல்ஸ் எடுக்க எதையும் செய்வதா? லைக்ஸ்களை அள்ளுவதற்காக பச்சிளம் குழந்தைகளையும் பணயமாக்க துணிந்துவிட்டீர்களா? இன்ஸ்டாவில் பப்ளிசிட்டிக்காக எந்த எல்லைக்கும் செல்வதா? என்று கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.
ஒரு தாயால் மட்டுமே குழந்தைகளை பராமரித்து வளர்க்க முடியும் என்று குடும்ப நல நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தரப்பட்டுள்ளன.. அப்படியிருக்கும்போது, இப்படி ஒரு தாயும் இருக்கிறாரே? என்று கேட்டு, இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications