உலக பொருளாதாரமே ஆடிப்போன நேரத்தில்.. தங்கம் விலை ஏறாமல் ஏன் குறையுது? தொடர்ந்து குறையுமா? விளக்கம்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைய தொடங்கி உள்ளது. வர்த்தக போருக்கு இடையே தங்கத்தின் விலை உயர்த்தானே வேண்டும். ஏன் குறைகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,037 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,284 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹6,829 ஆகவும் உள்ளது. கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதற்கு பின் பின்வரும் 5 காரணங்கள் உள்ளன.

1. வலுவான டாலர் = பலவீனமான தங்கம்
முதலீட்டாளர்கள் பொதுவாக வர்த்தக போரின் போது டாலரை நாடுவது வழக்கம். ஏனென்றால் மற்ற நாணயங்கள் எப்போது சரியும் என்று தெரியாது. இதனால் வர்த்தக போர்கள் பெரும்பாலும் அமெரிக்க டாலரை உயர்த்தும். இப்போதும் டாலர் பக்கம் மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். தங்கத்தின் விலை டாலரில் நிர்ணயம் செய்யப்படுவதால், வலுவான டாலர் காரணமாக தங்கத்தின் தேவை குறையும்.. டாலரின் தேவை அதிகரிக்கும். குறைந்த தேவையால் தங்கம் விலை குறையும்.
2. பணப்புழக்கம் = தங்கத்தை விற்கும் போக்கு
பொருளாதார நிச்சயமற்ற நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விரைவாக பணம் தேவைப்படலாம். இதனால் பலர் தங்கத்தை விற்கலாம். அது பாதுகாப்பானதாக இருந்தாலும் கூட பல பணம் தேவை என்பதால் தங்கத்தை விற்கலாம். மற்ற இடங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட அல்லது நிதியை விடுவிக்க தங்கத்தை விற்கலாம். இது தங்கத்தின் விலைகளை குறைக்கிறது.
3. மெதுவான பணவீக்கம்
வர்த்தக போர் காரணமாக பணவீக்கம் குறையும். பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாகலாம். பணவீக்கம் சரிந்தால் டாலரின் மதிப்பு அதிகரிக்கும். பணவீக்கத்தை தடுக்கவே தங்கம் பெரும்பாலும் வாங்கப்படுகிறது, எனவே பணவீக்கம் குறைவாக இருந்தால், தங்கத்திற்கான தேவை குறைவாக இருக்கும்.
4. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்
மத்திய வங்கிகள் பொதுவாக வர்த்தக போரின் போது வரிகளை குறைக்க வேண்டும். அப்படி பதில் விகிதங்களைக் குறைக்கவில்லை என்றால், அல்லது விகிதங்கள் அதிகமாக இருந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட அதிக வட்டி தரும் சொத்துக்களை விரும்புவார்கள். இதனால் அவர்கள் வேறு இடங்களில் முதலீடு செய்வார்கள். எனவே, தங்கத்தில் முதலீடு குறைகிறது, இதனால் அதன் விலை குறைகிறது.
5. சந்தையில் ஏற்கனவே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
முதலீட்டாளர்கள் வர்த்தக போரை எதிர்பார்த்திருந்ததால், ஏற்கனவே தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் கடந்த வாரங்களிலேயே விலைகள் உச்சத்தை எட்டியிருக்கலாம். இப்போது அது correct செய்யப்படுகிறது. இதனால் விலை குறைகிறது.
உலக பொருளாதாரம் சரிவு
உலக பொருளாதாரம் சரிந்தாலும் தங்கத்தின் விலையும் இதன் காரணமாக கூடவே சரிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி அறிமுகம் செய்த பின்.. இந்த வாரம் மார்க்கெட் மிக மோசமாக தொடங்கி உள்ளது. சீனாவில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக மார்க்கெட் சரிந்து உள்ளது. உலகம் முழுக்க ஒரே கையெழுத்தில் பொருளாதார அழிவை தூண்டிவிட்டுள்ளார் டிரம்ப்.
உலக அளவில் எந்தெந்த மார்க்கெட்டுகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பங்கு சந்தை சரிவால் ஜப்பான் மார்க்கெட் மூடப்பட்டது
ஜப்பானின் நிக்கேய் 225 9% குறைந்தது
சிங்கப்பூர் பங்குச் சந்தை 5.5% சரிவு
மலேசியா பங்குச் சந்தை 4% சரிவு
ஹாங்காங் பங்குச் சந்தை 8.8% சரிவு
தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான TSMC 10% சரிந்தது
தைவான் பங்கு குறியீடு திறந்த நிலையில் 9.8% சரிந்தது
ஜெர்மனி பங்குச் சந்தை எதிர்காலம் 5% குறைந்தது
ஜப்பானின் TOPIX வங்கிக் குறியீடு 14%க்கு மேல் குறைந்துள்ளது
ஷாங்காய் கச்சா எண்ணெய் 7% குறைந்தது
ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 6.4 சதவீதம் சரிவு
நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸ் 6%க்கு மேல் வீழ்ச்சி
பிட்காயின் $78,000 க்கு கீழ் வருகிறது
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications