ஊசலாடும் 5 உயிர்கள்.. டைட்டானிக்கால் மாயமான நீர்மூழ்கி கப்பலை மீட்பதில் சிரமம் ஏன்? திகில் காரணங்கள்
சென்னை: 1912ல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி உள்ளது. அதில் 5 பேர் சிக்கி உள்ள நிலையில் ஆக்சிஜன் காலியாகி உள்ளது. தற்போது அவர்கள் உயிருக்கு உசலாடி வரும் நிலையில் மீட்பு பணியில் உள்ள முக்கியமான சிக்கல்கள் பற்றிய திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.
1912ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நீராவி என்ஜின் கப்பலாக டைட்டானிக் இருந்தது. இந்த கப்பல் 1912ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் டிரான்ஸ் அட்லாண்டிக் பயணத்தை மேற்கொண்டது. இந்த கப்பல் புறப்பட்ட நான்கு நாட்களில் கடலுக்குள் இருக்கும் பனிப்பாறைகள் மீது மோதி விபத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கியது.
இந்த கோர விபத்தில் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதையடுத்து மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கடலுக்கடியில் தேடப்பட்டன. அப்போது கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.

கடலுக்குள் அடியில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரையில் இருந்து 3,800 மீட்டருக்கு கீழே இருப்பது தெரியவந்தது. இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தின் ‛டைட்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 பேருடன் பயணத்தை தொடங்கியது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்நிலையில் தான் இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென்று தொடர்டை இழந்து மாயமானது. நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணிநேரத்தில் தொடர்பை இழந்தது.
இந்நிலையில் இந்த நீர் மூழ்கி காணாமல் போய் 95 மணி நேரங்கள் ஆகிவிட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது. நீர் மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஸன் தற்போது காலியாகி உள்ளது. இதனால் உள்ளே இருக்கும் 5 உயிர்களுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் மாயமாகி உள்ள டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி ஏன் கடினமானதாக உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விபத்தில் சிக்கி கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பல் கிடக்கிறது. இந்த கப்பல் கடலில் அதிக ஆழத்தில் கிடக்கிறது. அந்த பகுதிக்கு சென்றால் இயல்பாகவே அழுத்தம் என்பது அதிகரிக்கும். இது மீட்பு பணியை கடினமாதாக மாற்றும.
மேலும் கடலில் தேடுதல் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு வானிலை நிலவரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய தேடுதல் பணிக்கும் வானிலை ஒத்துழைக்க வேண்டும். இருப்பினும் பகலில் மட்டுமே தேடும் பணியை மேற்கொள்ள முடியும். அதுவும் கடல் நீரின் வெப்பம் என்பது இயல்பு நிலையில் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதோடு இரவில் போதிய வெளிச்சமின்மையால் மீட்பு பணி தடைப்படும்.
மேலும் பொதுவாக நீருக்கடியில் மீட்பு பணி மேற்கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். இதனால் தான் நீர்மூழ்கி உள்பட பல்வேறு கப்பல்களில் மீட்பு பணிக்கு உதவும் வகையில் ஒலிகள் எழுப்பும் ஹோமிங் பொக்கான் கருவி பொருத்தப்பட்டு இருக்கும். தற்போது மூழ்கி உள்ள இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் அது இருக்கிறதா? என்பது இன்னும் தெரியவில்லை. இதனால் சிக்கல் நிலவி வருகிறது.
மேலும் நீரில் மூழ்கியுள்ள டைட்டன் கப்பல் ஏதாவது பிரச்சனையில் கடல் பரப்பில் இருந்தால் எளிமையாக கண்டுபிடித்து விடலாம். மாறாக உடைந்து நொறுங்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலுக்கு நடுவே சிக்கியிருந்தால் அதனை கண்டுபிடிப்பது என்பது சவாலான காரியமாகும். ஏனென்றால் நீர்மூழ்கி கப்பலின் பாகம் ஏதும், ஏற்கனவே மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகம் எது என்பதில் குழப்பம் ஏற்படும். மேலும் இந்த வகை மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் மீட்பு படையினருக்கு அதிக நம்பிக்கை இருக்க வேண்டும் என அமெரிக்க கடலோர காவல்படையின் கேப்டன் ஜேமி பிரடெரிக் கூறினார்.
மேலும் தற்போது தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்படும் ரிமோட் வாகனங்கள் மூலம் இதுவரை எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் டைட்டன் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்து மீட்பது பெரும் சவாலாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications