ரயிலில் ரிசர்வேஷன் பெட்டியில் இதை கவனிச்சீங்களா? அதென்ன ரயில் பெட்டியில பச்சை, மஞ்சள், வெள்ளை கோடு?
சென்னை: ரயில் பெட்டியில் இருக்கும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகளை என்றாவது நீங்கள் பற்றி கவனித்ததுண்டா? ரயில் பெட்டிகளில் வித்தியாசனமான நிறக்கோடுகள் தென்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்தியன் ரயில்வே சொல்வதென்ன?
இந்நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது... அதாவது விமானத்தில் இருப்பதை போலவே, அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

அதேபோல, பொதுப்பெட்டிகளில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு போதுமான அளவு குடிநீர், உணவு, ஸ்நாக்ஸ் போன்ற வசதிகள் தேவைக்கு ஏற்ப கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.. இதற்கு காரணம், ரயில் பயணத்தை மக்கள் ஒரு சுகமான அனுபவமாக உணர வேண்டும் என்பதேயாகும்.
இந்தியன் ரயில்வே: இப்படி பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் சில சலுகைகளை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்து வருகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்கள் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்களும் ரயில்வேயில் உள்ளன.
அதில் ஒன்றுதான் மஞ்சள் நிற கோடுகள்.. ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேலுள்ள மஞ்சள் நிற கோடுகளை கவனித்துள்ளீர்களா? இந்த மஞ்சள் நிற கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ரிசர்வேஷன் பெட்டி: இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள், ரிசர்வேஷன் பெட்டிகளாகவே இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.. எப்போதுமே முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது.
நீலநிற பெட்டியில் உள்ள 4 முனைகளிலுமுள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம்.. எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டுபிடிப்பதற்காகவே இப்படி நிறத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
நீலநிற பெட்டிகள்: இந்த நீலநிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத (unreserved coach) பெட்டிகள் என்று அர்த்தம். அதே போல மஞ்சள் கோடுகள் இருந்தால், அது உடல்நலக்குறைவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம். பச்சை நிற கோடுகள் இருந்தால், அது பெண்களுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications