இந்த ஆவணங்கள் ரெடியா?.. வந்தது மேஜர் அறிவிப்பு.. ஸ்மார்ட் ரேஷன் கார்டு மாற்றம்.. முக்கிய முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. ஆவணங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. விலாசம் மாற்றுவதற்கான அசத்தலான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விபரங்களை ஆன்லைன் வழியாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.

பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசத்தை மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml
வலது புறத்தில் அடுத்து "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.
1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழக ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற எத்தனை நாட்கள் ஆகும்?: முகவரிகளை மாற்ற அதிக நேரம் எடுக்காது. வழக்கமாக முகவரியைப் புதுப்பிக்க 15 முதல் 30 நாட்கள் ஆகும். ஆதார் அட்டை, இருப்பிட சான்றிதழ் ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து விலாசத்தை மாற்ற முடியும்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்? : தமிழ்நாட்டில் உங்கள் ரேஷன் கார்டு முகவரியை நீங்கள் சரிபார்க்கலாம். 1967-425-5901 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து, அங்குள்ள அதிகாரிகளிடம் உங்கள் முகவரியைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே இது ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ஆன்லைன் செயல்முறையாகும்.
செயலி அறிமுகம்: இது போக தமிழ்நாடு அரசு சார்பாக TNePDS அலைபேசி செயலி என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் TNePDS என்ற அலைபேசி செயலி மூலம் புகார் பதிவு செய்தல், பரிவர்த்தனைகள், ஒதுக்கீடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள்., நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம், நியாயவிலைக் கடையில் பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் பின்னூட்டம் (Feedback) ஆகிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இச்செயலியை கீழ்காணும் லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
ஃடோல் ப்ரீ: ஏற்கனவே தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர். அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனரும் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
சில்லறை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி Toll Free எண் 1800 599 1500ஐ தொடர்பு கொண்டு உங்கள் பயணச்சீட்டு விவரங்களை தெரிவித்து சில்லறைகளை UFI மூலமாக பெற்றுக்கொள்ளலாம். UNIFIED PAYMENTS INTERFACE வழியாக இந்த சில்லறை உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications