புது ரெக்கார்ட்! கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ய முடியாதது.. ஸ்டாலின் பெரிய அரசியல் சாதனை
சென்னை: தமிழ்நாடு அரசியலில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் செய்ய முடியாத மிகப்பெரிய அரசியல் சாதனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் ஸ்டாலின் மிகப்பெரிய அரசியல் சாதனை ஒன்றை செய்துள்ளார்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

இதில் 70128 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 28,604 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 5305 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் இந்த வெற்றி மூலம் வரிசையாக 11 தேர்தலில் வென்றுள்ளார்.
அதன்பட, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், 2024 விளவங்கோடு இடைத்தேர்தல் என மொத்தம் 10 தேர்தலில் திமுக கூட்டணி வென்றது. இன்று கூடுதலாக விக்கிரவாண்டி இடைதேர்தலிலும் திமுக வென்றுள்ளது . இதோடு 11 தேர்தலில் திமுக வெற்றி அடைந்து உள்ளது.
ஸ்டாலின் சாதனை: அதேபோல் லோக்சபா தேர்தல்களிலும் ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். லோக்சபா தேர்தல்களில்,
(1951) மொத்த இடங்கள் 75 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி
(1957) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி
(1962) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி
(1967) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 25 இடங்களில் வெற்றி
(1971) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 23 இடங்களில் வெற்றி
(1977) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17 இடங்களில் வெற்றி
(1980) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி
(1984) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 25 இடங்களில் வெற்றி
(1989) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி
(1991) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி
(1996) மொத்த இடங்கள் 39 களில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 20 இடங்களில் வெற்றி
(1998) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18 இடங்களில் வெற்றி
(1999) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 12 இடங்களில் வெற்றி
(2004) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 16 இடங்களில் வெற்றி
(2009) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 18 இடங்களில் வெற்றி
(2014) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களில் வெற்றி
(2019) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 24 இடங்களில் வெற்றி
வரலாறு: மேற்கண்ட தேர்தல் வரலாற்றில் எந்த தேர்தலிலும் முழு இடங்கள் வென்ற கட்சி அடுத்த முறை அதே அளவு இடங்களை தக்க வைத்து இல்லை.
அதாவது கிளீன் ஸ்வீப் செய்யும் கட்சி மீண்டும் அடுத்த தேர்தலில் அப்படி வென்றதே இல்லை. கருணாநிதி, எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த சாதனையை செய்தது இல்லை.
ஸ்டாலின் சாதனை: ஆனால் அந்த சாதனையை ஸ்டாலின் செய்துள்ளார். கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறை 40 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் இவர்கள் செய்யாத இரட்டை கிளீன் ஸ்வீப் சாதனையை செய்துள்ளார்
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications