காஃபி போடுவீங்களா பாஸ்! அதுவும் டிசைன் டிசைனா.. அப்ப ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளம் உங்களுக்குத்தான்!
சென்னை: கஃபே காபி டே', 'ஸ்டார்பக்ஸ்' போன்ற பிரபல காஃபி நிறுவனங்களில் காஃபி குடித்திருப்போம். சாதாரண டீக்கடைகளிலும் காஃபியின் சுவை இருந்தாலும் இது போன்ற பெரிய பெருநகரத்தில் உள்ள கடைகளில் அதை வாடிக்கையாளருக்கு கொடுக்கும் விதமே அழகாக இருக்கும்.
காபியில் ஏதேனும் படம் வரைந்து கொடுப்பார்கள். இப்படி கலைநயமிக்க காஃபிகள் போடுவதற்கு முக்கிய காரணம் அந்த கடைகளில் பணியாற்றும் மாஸ்டர்கள்தான். அப்படிப்பட்ட திறமைவாய்ந்த காஃபி மாஸ்டரை தேடுகிறது ஆஸ்திரேலியாவின் குட் கார்டெல் என்ற கஃபே நிறுவனம்.
பொதுவாக சமையல் கலைஞர்கள், டீ, காஃபி போடுபவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்காது. ஆனால் குட் கார்டெல் நிறுவனத்தில் காஃபி மாஸ்டருக்கு ஆண்டுக்கு 92 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ 50.7 லட்சமாகும்..

ஆஸ்திரேலியா
இந்த கடை எங்கிருந்து என்றால் ஆஸ்திரேலியாவில் ரெட் சேண்ட் பீச்கள் அதிகம் உள்ள இடம் இருக்கிறது. அந்த இடத்தில் கார்டெல் நிறுவனத்தில் காஃபி மாஸ்டர் வேலை பல மாதங்களாக காலியாக உள்ளது. மாஸ்டர் இல்லாததால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்த காபி கடை நிறுவனத்தினர் அதிக சம்பளத்திற்கு பணியாளரை அமர்த்த முயற்சித்து வருகிறது.

அதிக ஊதியம்
சம்பளம் அதிகம் கொடுக்கப்படுவதால் சில நிபந்தனைகளையும் அந்த நிறுவனம் விதித்துள்ளது. வார இறுதி நாட்கள் உள்பட வாரத்தில் 5 நாட்கள் வேலை இருக்கும். குறிப்பாக வாரத்திற்கு 47 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

ரூ 45 லட்சம் ஊதியம்
ஒரு வேளை வார இறுதி நாட்களில் விடுமுறை வேண்டும் என நினைத்தால் மற்ற 5 நாட்களில் வேலை செய்யலாம். அப்படி செய்தீர்கள் என்றால் ரூ 45 லட்சம் மட்டுமே ஊதியமாக கிடைக்கும். கொரோனா தொற்றால் பலர் வேலைகளையும் ஊதியத்தையும் இழந்தனர். பெரும்பாலானோருக்கு சதவீத அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது.

சுடு தண்ணீர்
இன்னும் சிலருக்கு கொரோனாவால் போன வேலை இன்னமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து "அடச்சே நமக்கு சுடு தண்ணீர் வைப்பதை தவிர வேறு எதுவுமே தெரியாமல் போச்சே!, ஆண்டவா என்னை ஏன் இப்படி ஒன்றும் தெரியாதவராக படைத்தாய் என நீங்கள் பேசும் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது பாஸ்!
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications