காகமா? மனிதனா? படத்தை பார்த்ததும் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க? உங்க கேரக்டர் இப்படித்தான் இருக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு காகம் தெரிகிறதா இல்லை மனித முகம் தெரிகிறதா? என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விளையாட்டுத்தனமாகவும், சிறந்த பொழுது போக்கும் படமாக இருந்தாலும் கிரியேட்டிவிட்டி அதிகம் கொண்டவை. இந்த இல்யூஷன் படங்கள் அறிவுத்திறன், ஒரு படத்தை பார்க்கும் கோணம், கவனிப்புத்திறன் உள்ளிட்டவையை கூட சொல்லலாம். அதாவது, இல்யூஷன் படத்தை நாம் எந்த விதத்தில் பார்க்கிறோம்.. என்பதை வைத்து ஒருவரது கேரக்டரை கூட சொல்லிவிட முடியும் என்கிறது சில ஆய்வுகள்.

Do you see a crow or a human face in the optical illusion picture super tips to find your character

அதாவது, உளவியல் அடிப்படையில் ஒரு படத்தை நாம் எந்த கோணத்தில் அணுகுகிறோம் என்பதை அடிப்படையாக கொண்டு ஒரு நபரின் கேரக்டர் இப்படித்தான் இருக்க கூடும் என்று ஓரளவு கணித்து விட முடியுமாம்.. கேரக்டர்கள் இல்யூஷன் படங்கள் ஒருபக்கம் என்றால்.. புதிர் மிக்க படங்கள் நெட்டிசன்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக உள்ளது. இதனால், இத்தகைய படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வட்டமடித்து கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஒரு ஆங்கிலில் பார்க்கும் போது காகம் கற்களை அடுக்கி கொண்டு இருப்பது போல தெரிகிறது.. இன்னொரு ஆங்கிலில் பார்த்தால் மனிதனின் முகம் தெரிகிறது. இதை வைத்து தான் ஒருவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியுமாம்.

அதாவது உங்களது முதல் பார்வையில் இந்த படத்தில் என்ன தெரிகிறது என்பதை வைத்து ஓரளவு உங்கள் கேரக்டரை சொல்லிவிட முடியும் என்கிறது இந்த ஆய்வுகள். வாருங்கள் சோதித்து பார்க்கலாம்.

முதலில் காகம் தெரிந்தால்..

இந்த படத்தில் ஒரு காக்கை தெரிந்தால் உங்கள் கேரக்டர் இப்படித்தான் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, யாருடைய கேரக்டரையும் எளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றல் உங்கள் வசம் இருக்கும். நம்பிக்கைக்குரிய நபராக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என மற்றவர்கள் உங்களை நம்புவார்கள்.

எந்த ரகசியத்தையும் இவரை நம்பி சொல்லலாம்பா.. கொஞ்சம் கூட கசியாது என்ற நம்பிக்கை உங்கள் மீது பலரும் வைத்து இருப்பார்கள். அதேபோல் எந்த ஒரு உதவியாக இருந்தாலும் சரி.. எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும் சரி.. முதலில் உங்களை நம்பி உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் வருவார்கள். அந்த அளவு நம்பிக்கைக்குரிய நபராக இருப்பீர்கள்..

மனித முகம் முதலில் தெரிந்தால்....

உங்களை சுற்றியுள்ள நபர்களிடம் இருந்தே நீங்கள் அதிகப்படியான சுய விமர்சனத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. நீங்கள் என்னதான் நல்லதே நினைத்தாலும்... உங்களின் எண்ணத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் விமர்சிக்க சான்ஸ் உள்ளது.

ஆனாலும் இதையெல்லாம் கடந்து செல்லும் அசாத்திய ஆற்றல் உங்கள் வசம் இருக்கும். எதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். உங்களின் சுய முன்னேற்றத்திற்காக எந்த ஒரு சவாலையும் கடந்து விட வேண்டும் என்ற விடாப்பிடியான எண்ணம் உங்களுக்கு இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+