Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் வருமானம் இவ்வளவு தானா? நியாயமா இது? சேலரியை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வருமானம் குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இஸ்ரோ கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து சந்திரயான் 3 , ஆதித்யா எல்1 திட்டங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு அறிவியல், கடும் முயற்சி, திட்டமிடல்தான் காரணம். முக்கியமான இஸ்ரோ தலைவராக சோம்நாத் வந்த பின் இஸ்ரோ இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Do you the salary and income of ISRO Chairman Somnath?

சமீபத்தில்தான் இஸ்ரோ வெற்றிகரமாக சந்திரயான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்தது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டது. இரண்டுமே தற்போது நிலவில் உறக்க நிலையில் உள்ளன.

ஆதித்யா: இப்படிப்பட்ட நிலையில்தான் சூரியனை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா மிஷனை கையில் எடுத்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் காலை விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த வாரம் 2வது சுற்றுபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் , ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தற்போது 282*40225 கிமீ சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்-1 சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சோம்நாத் வருமானம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வருமானம் குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. அதன்படி ரமா பிரசாத் கோயங்கா குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா (ஆர்பிஜி குழுமம்),தற்போது இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்தின் மாத சம்பளம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் கோயங்கா செய்துள்ள போஸ்டில் , "இஸ்ரோ தலைவர் சோமநாத்தின் மாதம் சம்பளம் ரூ. 2.5 லட்சம். இது சரியா, நியாயமா? அவரைப் போன்றவர்கள் பணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது ஒரு பக்கம். இருக்கட்டும் ஆனாலும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான அவர்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும், தங்கள் நாட்டிற்கு பங்களிப்பதற்கும், அவர்களின் நோக்கத்தை அடைவதில் தனிப்பட்ட நிறைவுக்காகவும், அவரைப் போன்றவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களுக்கு குறைந்தது 10 லட்சம் ரூபாய் சம்பளமாவது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்தால் இவர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பேன் என்று கோயங்கா கூறி உள்ளார்.

பொதுவாக ஐடி நிறுவனங்களில் சீனியர் பொறுப்பில் வேலை செய்யும் நபர்களுக்கு இதைவிட கூடுதல் சம்பளம் கொடுக்கப்படும் நிலையில் இந்தியாவின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவருக்கு இவ்வளவு குறைவாக சம்பளம் கொடுப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+