கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா? இனி பின் நம்பர் போடாமலேயே பணம் அனுப்பலாம்.. இதோ புதிய வழிமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தற்போது யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக வசதியானது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது.. டீக்கடை முதல் பெரிய ஜவுளிக்கடை வரை இன்று க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறை மிக வேகமாகப் பரவி வருகிறது.. இதில்தான் கூடுதல் வசதி ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தற்போது பரிசீலனை செய்து வருகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..

பொதுவாக ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், நாம் நமது சீக்ரெட் பின் நம்பரை பதிவிடுவது கட்டாயமாகும்.. ஆனால், பல நேரங்களில் கூட்ட நெரிசலில் இருக்கும்போது அல்லது அவசரமாக பணம் செலுத்தும்போது இந்த பின் நம்பரை டைப் செய்வது சற்று சிரமமாக அமையலாம்..

UPI PIN Google Pay PhonePe Biometric UPI

பணப்பரிவர்த்தனை

சில சமயங்களில் பின் நம்பரை மறந்துவிடுவதால் பணப்பரிவர்த்தனை தோல்வியடைவதும் நடப்பதுண்டு.. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் விதமாக, பின் நம்பர் இல்லாமலேயே பணத்தை அனுப்பும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது..

இந்த புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படை நோக்கம், பயனர்களின் அனுபவத்தை இன்னும் எளிமையாக்குவது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்.. இதற்கு பதிலாக பயோமெட்ரிக் எனப்படும் உயிரியல் அடையாள முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது..

ஸ்மார்ட்போன்கள்

அதாவது, எதிர்காலத்தில் இந்த வசதி அறிமுகமானால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை அடையாளம் அல்லது முக அங்கீகார வசதியை பயன்படுத்தி PIN இல்லாமல் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.. இதன் மூலம் சீக்ரெட் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை..

இந்த வசதி அறிமுகமான பிறகு, PIN நம்பருக்கு பதிலாக கைரேகை அல்லது முகஅடையாளத்தை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், மற்றவர்கள் உங்கள் பின் நம்பரை திருட்டுத்தனமாக பார்ப்பதையும் தடுத்து நிறுத்தும்..

யுபிஐ லைட் வசதி

தற்போதைய சூழலில், சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ லைட் என்ற வசதி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.. இதில் சிறிய தொகையை பின் நம்பர் இல்லாமலேயே அனுப்ப முடியும் என்றாலும், அதற்கு நாம் முன்கூட்டியே பணத்தை வேலட்டில் நிரப்ப வேண்டியிருக்கும்..

ஆனால், இப்போது பரிசீலனையில் உள்ள புதிய வசதி நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்தே பயோமெட்ரிக் முறையில் பணத்தை எடுக்க வழிவகுக்கும்.. இதன் மூலம், பாதுகாப்பான முறையில் PIN இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி வழங்கப்படலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்..

சைபர் குற்றங்கள்

குறிப்பாக, கைரேகை மற்றும் முக அடையாளம் என்பது தனித்துவமானது என்பதால், மற்றவர்களால் உங்கள் கணக்கை தவறாக பயன்படுத்துவது என்பது மிகவும் கடினமாக மாறும்.. இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும்போது, சைபர் குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன..

இந்த வசதியை செயல்படுத்துவதற்கு முன்பாக, வங்கிகளின் சர்வர்கள் மற்றும் யுபிஐ செயலிகளின் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன..

சென்சார்கள்

அனைத்து விதமான ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.. குறிப்பாக, குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்களில் இது எவ்வாறு வேலை செய்யும் என்பது குறித்த சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன..

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பின்னரே இந்த புதிய வசதி அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எதிர்காலத்தில் இந்த வசதி அறிமுகமானால், இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படும்.. மக்கள் மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தங்களின் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த புதிய முறை வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+