பூக்கடையோ பூந்தமல்லியோ! எங்க வேணாலும் இருங்க! ஆனா ஈஸியா கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வர இதுதான் ரூட்!
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை எளிதாக வந்தடைய எந்தெந்த வழித்தடங்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் 400 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்றைய தினம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் பயன்பாட்டுக்கு வந்தது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் தொடங்கியுள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்ய தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு எப்படி செல்வது என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ளது.
அடையாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வர
ஆப்ஷன் 1
அடையாறு முதல் கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் வரலாம். கிண்டி டூ தாம்பரம் வரை மின்சார ரயிலில் வந்து , தாம்பரம் டூ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வரலாம்.
ஆப்ஷன் 2
அடையாறு டூ கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும். கிண்டி டூ வண்டலூர் அல்லது ஊரபாக்கம் வரை மின்சார ரயிலில் வரலாம். நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம்
கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கிளாம்பாக்கம் வர
ஆப்ஷன் 1
கோயம்பேடு டூ கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்தில் வரலாம்
ஆப்ஷன் 2
கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு திரிசூலத்திலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வர வேண்டும். தாம்பரத்திலிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் வரலாம்.
ஆப்ஷன் 3
கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட வேண்டும். பின்னர் திரிசூலத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து நடந்தோ அல்லது ஷோ ஆட்டோவில் கிளாம்பாக்கம் வரலாம்.
குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல
ஆப்ஷன் 1
கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் வரை பேருந்தில் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர பேருந்துகள் உள்ளன.
ஆப்ஷன் 2
குன்றத்தூரிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும்.
வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு எப்படி செல்ல வேண்டும்
ஆப்ஷன் 1
வேளச்சேரியிலிருந்து கிண்டி ரயில் நிலையத்திற்கு மாநகர பேருந்து மாநகர பேருந்தில் இருந்து வந்தடைய வேண்டும். பிறகு கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்தில் வர வேண்டும்.
ஆப்ஷன் 2
வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு எம்டிசி பேருந்துகளில் வர வேண்டும்.
ஆப்ஷன் 3
வேளச்சேரியிலிருந்து கிழக்கு தாம்பரம் வரை மாநகர பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் வந்து அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.
சோளிங்கநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியினர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல
ஆப்ஷன் 1
சோளிங்கநல்லூரிலிருந்து தாம்பரம் கிழக்கு (பெரும்பாக்கம் வழியாக) மாநகர பேருந்தில் வர வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்தில் செல்ல வேண்டும்.
ஆப்ஷன் 2
சோளிங்கநல்லூர் முதல் தாம்பரம் கிழக்கு வரை பெரும்பாக்கம் வழியாக செல்லும் மாநகர பேருந்தில் செல்ல வேண்டும். தாம்பரத்திலிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் செல்ல வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ செல்ல வேண்டும்.
கேளம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல
ஆப்ஷன் 1
கேளம்பாக்கத்திலிருந்து நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லலாம்.
ஆப்ஷன் 2
கேளம்பாக்கத்திலிருந்து வண்டலூர் ரயில் நிலையம் வரை மாநகர பேருந்திலும் அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு செல்லலாம்.
போரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல
ஆப்ஷன் 1
போரூரில் இருந்து தாம்பரம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து மாநகர பேருந்தில் கிளாம்பாக்கம் செல்லாம்.
ஆப்ஷன் 2
போரூரிலிருந்து கிண்டி ரயில் நிலையம் வரை மாநகர பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் வரை மின்சார ரயிலில் செல்லலாம். அங்கிருந்து ஷேர் ஆட்டோவிலோ அல்லது நடந்தோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.
பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினர் கிளாம்பாக்கம் வர
ஆப்ஷன் 1
பூந்தமல்லி டூ தாம்பரத்திற்கு குன்றத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து இருக்கிறது.
ஆப்ஷன் 2
பூந்தமல்லியில் இருந்து குரோம்பேட்டைக்கு கத்திபாரா வழியாக செல்லும் பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
மாதவரம், செங்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியினர் கிளாம்பாக்கம் செல்ல
ஆப்ஷன் 1
மாதவரத்திலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு அரசு பேருந்தில் வரலாம்.
ஆப்ஷன் 2
செங்குன்றத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரலாம்.
பிராட்வே மற்றும் சுற்று வட்டார பகுதியினர் கிளாம்பாக்கம் வர
ஆப்ஷன் 1
பிராட்வேயிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக பேருந்து இருக்கிறது.
ஆப்ஷன் 2
உயர் நீதிமன்றத்திலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோவில் வந்துவிட்டு அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் பேருந்தில் ஏறி நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம்.
மீஞ்சூர் மற்றும் எண்ணூர் சுற்றியுள்ள மக்கள் கிளாம்பாக்கம் வர
ஆப்ஷன் 1
மீஞ்சூர், எண்ணூரிலிருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்தில் பயணிக்கலாம்.
ஆப்ஷன் 2
மீஞ்சூர் அல்லது எண்ணூரிலிருந்து பீச் ஸ்டேஷனுக்கு பேருந்தில் வந்து அங்கிருந்து வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்திற்கு ரயில் நிலையத்தில் வரலாம். அங்கிருந்து நடந்தோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையலாம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications