ஸ்விக்கி - ஜோமேட்டோவில் உணவு வேகமாக வரணுமா? ஆன்லைன் டெலிவரியில் இப்படி ‛புக்’ பண்ணுங்க போதும்
சென்னை: தற்போது ஆன்லைனில் உணவு செய்து சாப்பிடும் பழக்கம் என்பது அதிகரித்துள்ளது. ஆனாலும் பலருக்கும் குறித்த நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படுவது இல்லை. காலதாமதாக உணவு டெலிவரி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்நிலையில் தான் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ஸ்விகி, ஜோமேட்டோவில் இருந்து உணவு வேகமாக கிடைக்க புதிய டெக்னிக் ஒன்று உள்ளது. அது என்ன? வாங்க பார்க்கலாம்.
தற்போது பெரிய நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பிடித்த ஹோட்டல்களில் இருந்து ஆன்லைனில் உணவு முன்பதிவு செய்து இருந்த இடத்தில் இருந்தே சாப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. இதற்காக ஸ்விகி, ஜோமேட்டோ உள்பட ஏராளமான செயலிகள் உள்ளன.

இந்த செயலிகளில் நாம் விரும்பும் உணவை வீடு, அலுவலகத்தில் இருந்து முன்பதிவு செய்தால் போதும். அடுத்த சில நிமிடங்களில் டெலிவரி பாய் வந்து நம் வீட்டுக்கே அந்த உணவை தந்து விடுவார்.
இருப்பினும் கூட பலரும் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதாவது ஸ்விகி, ஜோமேட்டோவில் முன்பதிவு செய்த பிறகும் கூட அந்த உணவு சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை. செயலியில் காட்டும் நேரத்தை விட தாமதமாக தான் டெலிவரி பாய்கள் வந்து உணவு சப்ளை செய்வதாக கூறுவது உண்டு. இந்த காலதாமதத்துக்கு ஹோட்டலுக்கும், நாம் இருக்கும் இடத்துக்கும் இடையேயான தொலைவு, போக்குவரத்து நெரிசல் தான் மிக முக்கிய காரணமாகும்.
இத்தகைய சூழலில் தான் ஸ்விகி, ஜோமேட்டோவில் உணவு டெலிவரி செய்து அதனை சரியான நேரத்தில் பெறுவதற்கான டெக்னிக் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. இதனை பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'Ultimate Zomato Hack' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ‛‛ஸ்விகி, ஜோமேட்டோவில் குறித்த நேரத்தில் உணவு உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் அந்த செயலிகளில் சிஓடி எனும் கேஷ் ஆன் டெலிவரியை(உணவு வந்த பிறகு பணம் கொடுக்கும்) தேர்வு செய்ய வேண்டும். இப்படி உணவு முன்பதிவு செய்யும்போது குறித்த நேரத்தில் துல்லியமாக உணவு நமக்கு வரும். காலதாமதம் ஏற்படாது.
மேலும் ‛கேஷ் ஆன் டெலிவரி' செய்யும்போது கூடுதலாக எந்த கட்டணங்களும் வசூக்கப்படாது. மேலும் உணவு கைக்கு வந்த பிறகு அதற்கான தொகையை யுபிஐ மூலமாகவும் நாம் செலுத்த முடியும். மேலும் ‛கேஷ் ஆன் டெலிவரியை' ஒருவர் தேர்வு செய்யும்போது குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் தங்களின் பிரிமீயம் சந்தாரர்களை விட விரைவாக நம்மை கருதி உணவை டெலிவரி செய்கின்றன'' என கூறியிருந்தார்.
இந்த பதிவு என்பது கடந்த 21ம் தேதி ரெடிட் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரும் அவரது பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தங்களின் அனுபவத்தை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்போது பலரும் ‛கேஷ் ஆன் டெலிவரி' முறையை தேர்வு செய்யும்போது உணவு விரைவாக வருகிறது என்று அவரது பதிவை ஆதரித்தனர்.
அப்போது ஒருவர், "நான் ஸ்விக்கியில் கேஷ் ஆன் டெலவரி முறையை பல முறை முயற்சி செய்துள்ளனே். இதன்மூலம் வழக்கத்தை விட நான் பணத்துடன் முன்பதிவு செய்வதை காட்டிலும் 15 நிமிடங்கள் முன்பாகவே எனக்கு உணவு வந்துவிட்டது'' என்று கூறினார். ஆனால் இன்னொருவரோ, ‛‛கேஷ் ஆன் டெலிவரி முறையில் உணவு வேகமாக வருகிறது என்பதை நானும் கவனித்து இருக்கிறேன். ஆனால் இது டெலிவரி செய்யும் பகுதியை பொறுத்து மாறுபடுகிறது'' என்று தெரிவித்து இருந்தார். நீங்களும் ஒருமுறை இதனை செய்து பார்த்துவிட்டு உங்களின் கமெண்ட்டுகளை தட்டி விடுங்கள்.












Click it and Unblock the Notifications